உடனடி செய்தி

ஜம்முவில் திருமண விழாவில் துப்பாக்கிச்சூடு: உயிர் தப்பிய பரூக் அப்துல்லா

ஜம்முவில் திருமண விழாவில் துப்பாக்கிச்சூடு: உயிர் தப்பிய பரூக் அப்துல்லா

ஜம்மு - காஷ்மீரின் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டு கட்சித் தலைவருமான Farooq Abdullah ஜம்முவில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றபோது துப்பாக்கிச்சூடு நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு நகரின் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் கட்சி நிர்வாகி ஒருவரின் வீட்டில் நடைபெற்ற திருமண விழாவில் பரூக் அப்துல்லாவுடன், ஜம்மு - காஷ்மீர் துணை முதல்வர் Surinder Choudhary உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி முடிந்து அவர்கள் வெளியேறிக் கொண்டிருந்த போது, கூட்டத்தினரை நோக்கி ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் பரூக் அப்துல்லா அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். ஆனால் அருகில் இருந்த துணை முதல்வர் சுரிந்தர் சவுத்ரி லேசான காயமடைந்ததாக கூறப்படுகிறது.

தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் ஒளிந்து கொண்டிருந்தார். உடனடியாக செயல்பட்ட போலீசார் அவரை சுற்றிவளைத்து கைது செய்தனர்.

விசாரணையில், துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் அப்பகுதியை சேர்ந்த கமல் சிங் ஜம்வால் என தெரியவந்துள்ளது. அவரிடம் இருந்த துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அவர் மது போதையில் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் Ali Khamenei குறித்து பரவிய மரணச் செய்தி காரணமாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் சில பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
2 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
2 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்