உடனடி செய்தி

அரசு வழக்கறிஞர் நியமனம் குறித்து வழக்கு தொடர்ந்த த.வெ.க. நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்

அரசு வழக்கறிஞர் நியமனம் குறித்து வழக்கு தொடர்ந்த த.வெ.க. நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்
அரசு வழக்கறிஞர் நியமனத்தில் முறைகேடு மற்றும் லஞ்சம் நடைபெறுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த த.வெ.க. பெண் நிர்வாகி ஞானசவுந்தரி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்ட த.வெ.க. வழக்கறிஞர் அணி இணைச் செயலராக இருந்த ஞானசவுந்தரி, அரசு வழக்கறிஞர் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், லஞ்சம் பெறப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து நீதிமன்றத்தை அணுகியிருந்தார். அவரது மனுவில், மாவட்ட மகளிர் நீதிமன்றம் மற்றும் பிற நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கு விண்ணப்பித்ததாகவும், அரசியல் பரிந்துரை மற்றும் லஞ்சத்தின் அடிப்படையில் நியமனங்கள் நடைபெறுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. மேலும், இந்த நியமனங்களுக்கு தற்காலிக தடை விதிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கட்சியின் ஒழுங்கு நடவடிக்கையாக ஞானசவுந்தரி அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலர் மோகன்ராஜ் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

வானத்தின் கண் இஓஎஸ்-05 வெற்றி: ஜிஎஸ்எல்வி எப்-17 மூலம் விண்ணில் நிலைநிறுத்திய இஸ்ரோ
வானத்தின் கண் இஓஎஸ்-05 வெற்றி: ஜிஎஸ்எல்வி எப்-17 மூலம் விண்ணில் நிலைநிறுத்திய இஸ்ரோ
8 மணி நேரங்கள் முன்பு
கோவில் சொத்து விவரங்கள் 90 நாட்களில் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட உத்தரவு
கோவில் சொத்து விவரங்கள் 90 நாட்களில் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட உத்தரவு
8 மணி நேரங்கள் முன்பு
கோவில் நிதி ஹிந்து சமூக நலனுக்கே பயன்படுத்தப்பட வேண்டும்: விஎச்பி வலியுறுத்தல்
கோவில் நிதி ஹிந்து சமூக நலனுக்கே பயன்படுத்தப்பட வேண்டும்: விஎச்பி வலியுறுத்தல்
9 மணி நேரங்கள் முன்பு
நடுபழனி கோவிலில் பல கோடி ரூபாய் மதிப்பிலான மரகத முருகர் சிலை திருட்டு
நடுபழனி கோவிலில் பல கோடி ரூபாய் மதிப்பிலான மரகத முருகர் சிலை திருட்டு
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்