ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்கள் மீது தாக்குதல்: “தற்செயலானது” என ஈரான் விளக்கம்
டெஹ்ரான்: ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் இந்தியக் கொடி ஏந்திய எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த தாக்குதலுக்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேற்காசிய பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரான் தனது பாதுகாப்பு காரணங்களுக்காக ஹார்முஸ் ஜலசந்தியை தற்காலிகமாக மூடியுள்ளது. இதனால் அந்த வழியாக சென்ற பல சரக்கு கப்பல்கள் ஓமன் திசைக்கு திருப்பி அனுப்பப்பட்டன.
இந்நிலையில், நேற்று ஈரான் ராணுவ படகுகள் சில எண்ணெய் கப்பல்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் இந்தியாவைச் சேர்ந்த இரண்டு கப்பல்களும் அடங்கும். அவை சுமார் 20 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை ஏற்றிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் எந்த சேதமும் அல்லது உயிரிழப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துக்கு எதிராக இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், இந்தியாவுக்கான ஈரான் தூதர் டாக்டர் முகமது பதாலியை அழைத்து விளக்கம் கேட்டது.
இதற்கு பதிலளித்த ஈரான் தரப்பு, “இந்த தாக்குதல் தற்செயலாக நடந்தது. தகவல் தொடர்பு குறைபாடு காரணமாக இந்த நிலை ஏற்பட்டது” என விளக்கம் அளித்துள்ளது.
மேலும், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பயணிக்கும் இந்திய கப்பல்களுக்கு பாதுகாப்பு உறுதி அளிக்க வேண்டும் என இந்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து ஈரான் தரப்பில் இருந்து, இந்தியாவுடன் உள்ள உறவு மிகவும் வலுவானது என்றும், இந்த பிரச்சினை அமைதியான முறையில் தீர்க்கப்படும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
1 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
1 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
1 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்