உடனடி செய்தி

ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம்: 15 இந்திய எண்ணெய் கப்பல்கள் சிக்கியது

ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம்: 15 இந்திய எண்ணெய் கப்பல்கள் சிக்கியது
டெஹ்ரான்: ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் அமெரிக்க கடற்படை கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவைச் சேர்ந்த 15 எண்ணெய் மற்றும் எரிவாயு கப்பல்கள் அப்பகுதியில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பதற்றம் சமீபத்தில் மேலும் தீவிரமடைந்துள்ளது. போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் அதன் அருகிலுள்ள ஈரான் துறைமுகங்களில் அமெரிக்கா கடற்படை நடவடிக்கைகளை வலுப்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கைகளின் விளைவாக, உலகின் முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய், சமையல் எரிவாயு, திரவமயமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) போன்றவற்றை ஏற்றி வந்த இந்திய கப்பல்கள் அப்பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வ தகவல்களின் படி, அந்த பகுதியில் மொத்தம் 25 இந்திய கப்பல்கள் இருந்த நிலையில், அதில் 10 கப்பல்கள் பாதுகாப்பாக கடந்து சென்றுள்ளன. மீதமுள்ள 15 கப்பல்கள் இன்னும் மேற்குப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்திய கடற்படை மற்றும் கடல்வழி பாதுகாப்பு அமைப்புகள், சிக்கியுள்ள கப்பல்களை பாதுகாப்பாக வழிநடத்த தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், அமெரிக்கா விதித்த கடற்படை தடையை ஈரான் கடுமையாக எதிர்த்து, பிராந்தியத்தில் எந்த நாட்டின் கப்பல்களும் பாதுகாப்பாக இருக்காது என எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பாரசீக வளைகுடா பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
1 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
1 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
1 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்