புதுடில்லி
பஞ்சாப் அமிர்தசரஸ் நகரில் ரெயில் மோதி பலர் மாண்ட விவகாரத்தை மனித உரிமை ஆணயம் தானாக விசாரணைக்கு எடுத்துக் கொண்டது,
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் கடந்த 19ஆம் தேதி இரவு தசரா கொண்டாட்டம் நடந்தது. இந்த கொண்டாட்டத்தை காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துளதாக கூறப்படுகிறது. தண்டவாளத்தை ஒட்டி இந்த நிகழ்ச்சி நடந்ததால் பலர் தண்டவாளத்தில் ஏறி நின்று வேடிக்கை பார்த்தனர். அப்போது அங்கு வந்த ரெயில் கூட்டத்தினர் மீது மோதியதில் 60 பேர் பரிதாபமாக மரணம் அடைந்தனர்.
இந்த விவகாரம் குறித்த விசாரணையை மனித உரிமை ஆணையம் தானாகவே முன் வந்து எடுத்துள்ளது. பஞ்சாபை ஆளும் காங்கிரஸ் அரசுக்கு ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அத்துடன் மாநில தலைமை செயலருக்கும் ரெயில்வே வாரிய தலைவருக்கும் நோட்டிஸ் அனுப்பி உள்ளது.
அந்த நோட்டிஸில், “ரெயில் தண்டவாளத்தில் அமர்ந்து மக்கள் வேடிக்கை பார்ப்பது விவேகமான செயல் அல்ல. அதே சமயத்தில் இந்த சம்பவத்தில் மாநில அரசின் மெத்தனமும் மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியமும் வெளிப்படையாக தெரிகிற்து.
இந்த தசரா கொண்டாட்டத்தில் பங்கு பெற்ற மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது மாநில அரசின் பொறுப்பு ஆகும். அவ்வாறு பொறுப்பு எடுத்துக் கொள்ளாதது குறித்து ஆணையத்துக்கு இன்னும் 4 வாரங்களுக்குள் மாநில அரசு விளக்கம் அளிக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. பஞ்சாப் ரெயில் விபத்து : மாநில காங் அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டிஸ்
புதுடில்லி
பஞ்சாப் அமிர்தசரஸ் நகரில் ரெயில் மோதி பலர் மாண்ட விவகாரத்தை மனித உரிமை ஆணயம் தானாக விசாரணைக்கு எடுத்துக் கொண்டது,
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் கடந்த 19ஆம் தேதி இரவு தசரா கொண்டாட்டம் நடந்தது. இந்த கொண்டாட்டத்தை காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துளதாக கூறப்படுகிறது. தண்டவாளத்தை ஒட்டி இந்த நிகழ்ச்சி நடந்ததால் பலர் தண்டவாளத்தில் ஏறி நின்று வேடிக்கை பார்த்தனர். அப்போது அங்கு வந்த ரெயில் கூட்டத்தினர் மீது மோதியதில் 60 பேர் பரிதாபமாக மரணம் அடைந்தனர்.
இந்த விவகாரம் குறித்த விசாரணையை மனித உரிமை ஆணையம் தானாகவே முன் வந்து எடுத்துள்ளது. பஞ்சாபை ஆளும் காங்கிரஸ் அரசுக்கு ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அத்துடன் மாநில தலைமை செயலருக்கும் ரெயில்வே வாரிய தலைவருக்கும் நோட்டிஸ் அனுப்பி உள்ளது.
அந்த நோட்டிஸில், “ரெயில் தண்டவாளத்தில் அமர்ந்து மக்கள் வேடிக்கை பார்ப்பது விவேகமான செயல் அல்ல. அதே சமயத்தில் இந்த சம்பவத்தில் மாநில அரசின் மெத்தனமும் மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியமும் வெளிப்படையாக தெரிகிற்து.
இந்த தசரா கொண்டாட்டத்தில் பங்கு பெற்ற மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது மாநில அரசின் பொறுப்பு ஆகும். அவ்வாறு பொறுப்பு எடுத்துக் கொள்ளாதது குறித்து ஆணையத்துக்கு இன்னும் 4 வாரங்களுக்குள் மாநில அரசு விளக்கம் அளிக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்புடைய செய்திகள்
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
5 மணி நேரங்கள் முன்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
5 மணி நேரங்கள் முன்பு
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
6 மணி நேரங்கள் முன்பு
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்