உடனடி செய்தி

ஈரான் தற்கொலைப் படகு தாக்குதல்: அமெரிக்க எண்ணெய் டேங்கர் கப்பலில் இந்தியர் பலி

ஈரான் தற்கொலைப் படகு தாக்குதல்: அமெரிக்க எண்ணெய் டேங்கர் கப்பலில் இந்தியர் பலி
ஈராக்கின் கோர் அல் ஜூபைர் துறைமுகத்திற்கு அருகே அமெரிக்காவிற்கு சொந்தமான கச்சா எண்ணெய் டேங்கர் கப்பல் மீது ஈரான் தற்கொலைப் படகு தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் கப்பலில் பணியாற்றிய இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். கப்பலில் இருந்த மற்ற 27 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் மேற்கு ஆசியாவில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. ‘சபேசியா விஷ்ணு’ எனப்படும் இந்த கச்சா எண்ணெய் டேங்கர் கப்பல் 2007ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த கப்பல் சுமார் 228.6 மீட்டர் நீளமும் 32.57 மீட்டர் அகலமும் கொண்டதாகும். இதன் மொத்த எடை 42,010 டன் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், மேற்கு ஆசியாவின் முக்கிய கடல் வழியான ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் கப்பல்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தையடுத்து, இந்திய மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு துரிதமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: கருணை அடிப்படையிலான அரசு பணி நியமனத்தை ரத்து செய்த உயர்நீதிமன்றம்
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: கருணை அடிப்படையிலான அரசு பணி நியமனத்தை ரத்து செய்த உயர்நீதிமன்றம்
11 மணி நேரங்கள் முன்பு
'நீட்' போராட்டம் சர்ச்சை: இ.கம்யூ. மீது த.வெ.க. அதிருப்தி? கூட்டணியில் விரிசல் பேச்சு
'நீட்' போராட்டம் சர்ச்சை: இ.கம்யூ. மீது த.வெ.க. அதிருப்தி? கூட்டணியில் விரிசல் பேச்சு
11 மணி நேரங்கள் முன்பு
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் தீவிரம்; முசாபராபாத்தை நோக்கி ஆயிரக்கணக்கானோர் பேரணி
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் தீவிரம்; முசாபராபாத்தை நோக்கி ஆயிரக்கணக்கானோர் பேரணி
11 மணி நேரங்கள் முன்பு
காமன்வெல்த் பளுதூக்குதலில் தங்கம் வென்ற மீராபாய் சானு; வரலாற்றுச் சாதனை படைத்து இந்தியாவுக்கு பெருமை
காமன்வெல்த் பளுதூக்குதலில் தங்கம் வென்ற மீராபாய் சானு; வரலாற்றுச் சாதனை படைத்து இந்தியாவுக்கு பெருமை
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்