உடனடி செய்தி

பாராளுமன்ற பொதுத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு இந்து தமிழர் கட்சி முழு ஆதரவு

பாராளுமன்ற பொதுத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு இந்து தமிழர் கட்சி முழு ஆதரவு

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ச. ராமதாசு அவர்களை இந்து தமிழர் கட்சியின் நிறுவனர் இராம. ரவிக்குமார் நேரில் சந்தித்து தெரிவித்து தமது ஆதரவை தெரிவித்துள்ளார்.

மேலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்ற கழகம், புதிய தமிழகம், புதிய நீதி கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி என்று தமிழகத்தில் 40 இடங்களிலும் தமது ஆதரவை தெரிவித்துள்ளது.

https://youtu.be/2uYh25rjkJc
பாட்டாளி மக்கள் கட்சிக்கு இந்து தமிழர் கட்சியினர் ஆதரவு

நடைபெறவுள்ள-2019ம்ஆண்டு பாராளுமன்ற பொதுத் தேர்தலில் பாரதப் பிரதமராக மீண்டும் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் ஒரு நல்லரசு_ பாரதத்தின் வல்லரசு அமைய தமிழகத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையில் அமைந்துள்ள கூட்டணியில் இணைந்து "தமிழகம் என்றும் தேசியத்தின் பக்கம்"- என்பதை தாங்கள் பறைசாற்றி இருக்கிறீர்கள்.

இதற்கு இந்து தமிழர் கட்சியின் சார்பில் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும், வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறோம்.

மேலும் தமிழகத்தில் நடைபெற உள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்ற கழகம், புதிய தமிழகம், புதிய நீதி கட்சி,தமிழ் மாநில காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட...... அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி வெற்றி வேட்பாளராக போட்டியிடக்கூடிய
அரச பிள்ளைபட்டி
திரு க.ஜோதி முத்து அவர்கள் வெற்றிக்கும் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி வெற்றி வேட்பாளர்கள் போட்டியிடும் அனைத்து தொகுதிகளின் வெற்றிக்கும் இந்து தமிழர் கட்சியின் ஆதரவை தெரிவித்து கொள்கிறோம். நமதுநிர்வாகிகள் முழு ஒத்துழைப்பையும், ஆதரவையும் வழங்குவார்கள் என்பதை தங்களுக்கு உறுதி அளிக்கிறோம்.

"வெற்றிவேல்_
வீரவேல்"

இப்படிக்கு
தேசப் பணியில்

இராம. இரவிக்குமார்
நிறுவன தலைவர்
இந்து தமிழர் கட்சி

தொடர்புடைய செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
3 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
3 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
4 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்