உடனடி செய்தி

அமெரிக்கா–இந்தியா வர்த்தக ஒப்பந்தம் நிறைவு : இந்திய பொருட்களுக்கான வரி 50% → 18% ஆக குறைப்பு

அமெரிக்கா–இந்தியா வர்த்தக ஒப்பந்தம் நிறைவு : இந்திய பொருட்களுக்கான வரி 50% → 18% ஆக குறைப்பு

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான நீண்டகால வர்த்தக பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் மீது அமெரிக்கா விதித்து வந்த மொத்த 50 சதவீத வரிவிதிப்பு, தற்போது 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கியதன் காரணமாக, அமெரிக்கா கூடுதல் 25 சதவீத அபராத வரியை விதித்திருந்தது. இதன் காரணமாக இந்திய ஏற்றுமதி பொருட்கள் கடும் பாதிப்பை சந்தித்தன.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இறுதியாக முடிவுக்கு வந்தது. கூடுதல் அபராத வரி முழுமையாக நீக்கப்பட்டு, அடிப்படை வரியும் 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் ஊக்கமாக அமையும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மின் தடை விவகாரம்: ‘பியூஸ் கேரியர்’ காரணமா? பழனிசாமி கடும் விமர்சனம்
மின் தடை விவகாரம்: ‘பியூஸ் கேரியர்’ காரணமா? பழனிசாமி கடும் விமர்சனம்
20 மணி நேரங்கள் முன்பு
போக்சோ வழக்கில் மதபோதகருக்கு 7 ஆண்டு சிறை | திருநெல்வேலி நீதிமன்ற தீர்ப்பு
போக்சோ வழக்கில் மதபோதகருக்கு 7 ஆண்டு சிறை | திருநெல்வேலி நீதிமன்ற தீர்ப்பு
20 மணி நேரங்கள் முன்பு
ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது பாலியல் புகார்; சிங்கப்பெண் படை மீது இபிஎஸ் கேள்வி
ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது பாலியல் புகார்; சிங்கப்பெண் படை மீது இபிஎஸ் கேள்வி
20 மணி நேரங்கள் முன்பு
இந்திய விமானங்களுக்கு அச்சுறுத்தல்? பாகிஸ்தான் சதிக்கு கடும் நடவடிக்கை தேவை: ஹிந்து முன்னணி
இந்திய விமானங்களுக்கு அச்சுறுத்தல்? பாகிஸ்தான் சதிக்கு கடும் நடவடிக்கை தேவை: ஹிந்து முன்னணி
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்