உடனடி செய்தி

இலங்கை கடற்பரப்பில் ஈரான் போர்க் கப்பல் மீது அமெரிக்க டார்பிடோ தாக்குதல்: 87 பேர் உயிரிழப்பு

இலங்கை கடற்பரப்பில் ஈரான் போர்க் கப்பல் மீது அமெரிக்க டார்பிடோ தாக்குதல்: 87 பேர் உயிரிழப்பு

இலங்கையின் காலி துறைமுகம் அருகே சர்வதேச கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த ஈரானின் 'ஐரிஸ் டீனா' போர்க் கப்பல் மீது அமெரிக்க கடற்படை திடீர் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கப்பல் சமீபத்தில் வங்கக் கடலில் நடைபெற்ற பன்னாட்டு கடற்படை கூட்டுப் பயிற்சியில் கலந்து கொண்டு, பின்னர் இந்தியப் பெருங்கடல் வழியாக திரும்பிக் கொண்டிருந்தது.

இலங்கையிலிருந்து சுமார் 75 கிலோமீட்டர் தொலைவில் சென்றுகொண்டிருந்த போது, அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து செலுத்தப்பட்ட டார்பிடோ ஏவுகணை கப்பலை தாக்கியதாக கூறப்படுகிறது. தாக்குதலின் விளைவாக கப்பல் வெடித்து இரு துண்டுகளாக உடைந்து கடலில் மூழ்கியது.

அந்த நேரத்தில் கப்பலில் 180 பேர் இருந்ததாகவும், அதில் 87 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவசர அழைப்பை தொடர்ந்து இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை மீட்பு பணிகளில் ஈடுபட்டதாகவும், சிலர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்பு நிலைமை குறித்து பல்வேறு நாடுகள் கவலை வெளியிட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: கருணை அடிப்படையிலான அரசு பணி நியமனத்தை ரத்து செய்த உயர்நீதிமன்றம்
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: கருணை அடிப்படையிலான அரசு பணி நியமனத்தை ரத்து செய்த உயர்நீதிமன்றம்
13 மணி நேரங்கள் முன்பு
'நீட்' போராட்டம் சர்ச்சை: இ.கம்யூ. மீது த.வெ.க. அதிருப்தி? கூட்டணியில் விரிசல் பேச்சு
'நீட்' போராட்டம் சர்ச்சை: இ.கம்யூ. மீது த.வெ.க. அதிருப்தி? கூட்டணியில் விரிசல் பேச்சு
13 மணி நேரங்கள் முன்பு
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் தீவிரம்; முசாபராபாத்தை நோக்கி ஆயிரக்கணக்கானோர் பேரணி
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் தீவிரம்; முசாபராபாத்தை நோக்கி ஆயிரக்கணக்கானோர் பேரணி
14 மணி நேரங்கள் முன்பு
காமன்வெல்த் பளுதூக்குதலில் தங்கம் வென்ற மீராபாய் சானு; வரலாற்றுச் சாதனை படைத்து இந்தியாவுக்கு பெருமை
காமன்வெல்த் பளுதூக்குதலில் தங்கம் வென்ற மீராபாய் சானு; வரலாற்றுச் சாதனை படைத்து இந்தியாவுக்கு பெருமை
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்