உடனடி செய்தி

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வீட்டில் தாக்குதல் – சந்தேக நபர் கைது

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வீட்டில் தாக்குதல் – சந்தேக நபர் கைது

அமெரிக்க துணை அதிபராக ஜே.டி. வான்ஸ் பதவி வகித்து வருகிறார். இவரது ஓஹியோ மாநிலத்தில் உள்ள வீட்டின் வெளிப்புறத்தில் மர்ம நபர் ஒருவர் சரமாரியாக தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் நடந்த நேரத்தில் ஜே.டி. வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் இல்லை என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தாக்குதலில் வீட்டின் வெளிப்புற ஜன்னல்கள் சேதமடைந்துள்ளன.

இந்த தாக்குதல் ஜே.டி. வான்ஸ் அல்லது அவரது குடும்பத்தினரை குறிவைத்து நடத்தப்பட்ட இலக்கு தாக்குதலா என்பதைக் கண்டறிய புலனாய்வு மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

சம்பவம் நடந்த சில மணி நேரங்களுக்கு முன்பே துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் அந்த இடத்தை விட்டு புறப்பட்டுச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வழக்கில் தொடர்புடைய சந்தேக நபரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து ஜே.டி. வான்ஸோ அல்லது வெள்ளை மாளிகையோ இதுவரை எந்த அதிகாரப்பூர்வ கருத்தையும் வெளியிடவில்லை.

தொடர்புடைய செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
1 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
1 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
1 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்