ஜூலை 1 முதல் மாநிலம் முழுவதும் களப்பணி: அண்ணாமலை புதிய இயக்கத்தை தொடங்குகிறார்
பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஜூலை 1 முதல் மாநிலம் முழுவதும் தன்னார்வலர்களுடன் இணைந்து களப்பணிகளை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், கோவையில் அப்துல் கலாம் பெயரில் அமைக்கப்பட்டுள்ள அறநெறி மற்றும் அரசியல் மையம் ஆகஸ்ட் 15ஆம் தேதி திறக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். இந்த மையத்தின் மூலம் லட்சக்கணக்கான தன்னார்வலர்களுக்கு அரசியல் மற்றும் தலைமைத்துவ பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் கூறினார்.
தமிழகத்தில் நல்ல நிர்வாகத்தை உருவாக்கும் நோக்கில் பல்வேறு தரப்பினரும் தன்னார்வலர்களாக இணைந்து வருவதாகவும், "நாம் இந்தியர்கள், நாம் தமிழர்கள்" என்ற ஒற்றுமை கருத்துடன் இன, மத, ஜாதி வேறுபாடுகளை கடந்து மக்கள் இயக்கத்தை முன்னெடுத்து வருவதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.
வெளிநாடுகளில் உள்ள தமிழர்களும், 'We The Leaders' இயக்கத்தில் இணைய விரும்புவோரும் அதன் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
ஜூலை மாதம் முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு களப்பணிகளும், ஆகஸ்ட் மாதம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்த அவர், அரசு மீது குற்றச்சாட்டு சுமத்துவதை விட மக்கள் பங்கேற்புடன் நேரடி சமூகப் பணிகளில் ஈடுபடுவதே இயக்கத்தின் நோக்கம் என்றார்.
மேலும், ஜூலை முதல் வாரத்தில் தன்னார்வலர்களுக்கான புதிய மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
ரூ.3,070 கோடி திட்டம்: தேஜஸ் விமானம் முதல் போர்க்கப்பல் வரை 405 பாதுகாப்பு உபகரணங்கள் இந்தியாவில் தயாரிப்பு
16 மணி நேரங்கள் முன்பு
அரசு பள்ளி விடுதியில் அதிர்ச்சி: இரண்டு மாணவியருக்கு பாலியல் துன்புறுத்தல்; பெண் ஊழியர் கைது
16 மணி நேரங்கள் முன்பு
விமர்சனங்களை ஒடுக்க முயற்சியா? த.வெ.க. அரசை அண்ணாமலை கடுமையாக விமர்சிப்பு
17 மணி நேரங்கள் முன்பு
சீரற்ற மின் விநியோகத்தால் திணறும் தமிழகம்; தொழிற்சாலைகள் முதல் வீட்டு உபகரணங்கள் வரை கடும் பாதிப்பு
2 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்