கடைசி நிமிட திருப்பம்: செனகலை வீழ்த்தி ரவுண்டு-16க்கு முன்னேறிய பெல்ஜியம்
பிபா உலகக் கோப்பை தொடரின் ரவுண்டு-32 சுற்றில், பெல்ஜியம் அணி பரபரப்பான ஆட்டத்தில் செனகலை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ரவுண்டு-16 சுற்றுக்கு தகுதி பெற்றது.
சியாட்டிலில் நடைபெற்ற இந்த போட்டியில், தொடக்கத்திலிருந்தே செனகல் வீரர்கள் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 24-வது நிமிடத்தில் ஹபீப் தியாரா முதல் கோலை அடித்தார். தொடர்ந்து 51-வது நிமிடத்தில் இஸ்மைலா சார் கோல் அடித்ததால் செனகல் 2-0 என்ற முன்னிலை பெற்றது.
தோல்வியின் விளிம்பில் இருந்த பெல்ஜியம் அணிக்கு 86-வது நிமிடத்தில் மாற்று வீரராக வந்த ரோமேலு லுகாகு உயிர் கொடுத்தார். அவர் அடித்த கோல் பெல்ஜியத்திற்கு நம்பிக்கை அளித்தது. அதனைத் தொடர்ந்து 89-வது நிமிடத்தில் யூரி திலீமன்ஸ் அற்புதமான கோல் அடித்து ஆட்டத்தை 2-2 என சமன் செய்தார்.
இதனால் போட்டி கூடுதல் நேரத்துக்கு சென்றது. கூடுதல் நேரத்தின் இறுதி தருணங்களில், வார் தொழில்நுட்ப பரிசீலனைக்குப் பிறகு பெல்ஜியத்திற்கு பெனால்டி வழங்கப்பட்டது. 120+5-வது நிமிடத்தில் யூரி திலீமன்ஸ் அந்த வாய்ப்பை கோலாக மாற்றி, பெல்ஜியத்திற்கு 3-2 என்ற திரில் வெற்றியை பெற்றுத் தந்தார்.
இந்த வெற்றியின் மூலம் பெல்ஜியம் ரவுண்டு-16 சுற்றுக்கு முன்னேறியது. முன்னிலை பெற்றிருந்தும் கடைசி கட்டத்தில் சரிந்த செனகல் அணி தொடரிலிருந்து வெளியேறியது.
தொடர்புடைய செய்திகள்
கடைசி நிமிட கோலில் பிரேசில் வெற்றி: ஜப்பானின் உலகக் கோப்பை கனவு முடிவு
1 நாட்கள் முன்பு
ஜப்பானை வீழ்த்தி பிரேசில் 'ரவுண்டு-16'க்கு முன்னேற்றம்: கடைசி நிமிட கோலில் திரில் வெற்றி
2 நாட்கள் முன்பு
உலகக் கோப்பை கால்பந்து: ஸ்பெயின் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி – உருகுவே வெளியேற்றம்
4 நாட்கள் முன்பு
உலகக்கோப்பை கால்பந்து: நார்வேயை வீழ்த்திய பிரான்ஸ்; ஈராக்கை 5 கோல்களில் துவம்சம் செய்த செனகல்
5 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்