கோயில் மரபு மீறல் சர்ச்சை: செருப்புடன் மாலை ஏற்ற தி.மு.க வேட்பாளர் மீது எதிர்ப்பு
தஞ்சாவூர் சட்டசபை தொகுதிக்கான தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மாநகராட்சி மேயர் ராமநாதன் தொடர்பாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
அவரது ஆதரவாளர்கள் வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்வில், சிறிய கோயிலில் சாமி சன்னதி முன்பு மாலை அணிவிக்கப்பட்டது. அந்த நேரத்தில், வேட்பாளர் ராமநாதன் செருப்பு காலுடன் நின்றபடி மாலை ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும், மாலை அணிவித்த ஆதரவாளரும் காலணியுடன் இருந்ததாக சமூக வலைதளங்களில் வெளியான புகைப்படங்கள் காட்டுகின்றன.
இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவியதை தொடர்ந்து, பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, கோயில் மரபுகள் மற்றும் மத உணர்வுகளை மதிக்காமல் நடந்துகொண்டதாக ஹிந்து அமைப்புகள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளன.
இதனால், இந்த சம்பவம் அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
த.வெ.க.வில் இணைந்த ஜெகத்ரட்சகன் மகன், வைகைச்செல்வன்; புதிய நிர்வாகிகளை சந்தித்த முதல்வர் விஜய்
18 நிமிடங்கள் முன்பு
அயோத்தி ராமர் கோவில் உண்டியல் விவகாரம்: ஆர்.எஸ்.எஸ். வட்டாரத்தில் அதிகரிக்கும் கவலை
22 நிமிடங்கள் முன்பு
கவர்னரை சந்தித்த திமுக, அதிமுக: த.வெ.க. அரசு மீது குதிரைப் பேரம் உள்ளிட்ட பல்வேறு புகார்கள்
27 நிமிடங்கள் முன்பு
முதல்வர் குறித்து பேசிய விவகாரம்: முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது; நிபந்தனை ஜாமின்
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்