உடனடி செய்தி

கூட்டம் குறைந்ததால் அதிர்ச்சி: பிரசாரத்தில் புதிய திட்டம் வகுக்கும் முதல்வர் ஸ்டாலின்

கூட்டம் குறைந்ததால் அதிர்ச்சி: பிரசாரத்தில் புதிய திட்டம் வகுக்கும் முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் மு.க. ஸ்டாலின் சமீபத்தில் சில மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். ஆனால் எதிர்பார்த்த அளவில் மக்கள் திரளாக கலந்து கொள்ளாதது கவனத்தை ஈர்த்துள்ளது. பல இடங்களில் நாற்காலிகள் காலியாக இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையை எதிர்க்கட்சியினர் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். மேலும், சில மாவட்டங்களில் தி.மு.க. கட்சியின் ஆதரவு, வேட்பாளர் அறிவிப்பிற்குப் பிறகு குறைந்துள்ளதாக உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தனது மருமகனான சபரீசன் அவர்களை களமிறக்கி, கட்சி அமைப்பை வலுப்படுத்த முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்திற்கு சென்ற சபரீசன், தி.மு.க., தே.மு.தி.க., மற்றும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தை அதிகரிக்க மாவட்ட நிர்வாகிகளுக்கு தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் 'சீட்' கிடைக்காததால் அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளை எச்சரித்து, ஒற்றுமையுடன் செயல்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.q

தொடர்புடைய செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
3 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
3 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்