உடனடி செய்தி
செய்திகள் ⚡ உடனடி செய்தி

மகளிர் இடஒதுக்கீடு விவகாரம்: அமித் ஷாவிடம் விளக்கம் கோரிய பழனிசாமி

மகளிர் இடஒதுக்கீடு விவகாரம்: அமித் ஷாவிடம் விளக்கம் கோரிய பழனிசாமி
சென்னை: தொகுதி மறுவரையறையுடன் இணைந்த மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா தொடர்பாக அரசியல் சூடு அதிகரித்து வருகிறது. தி.மு.க. இந்த விவகாரத்தை அரசியலாக்கி வருவதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். பாராளுமன்றத்தில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவுடன், தொகுதி மறுவரையறை குறித்த விவாதமும் எழுந்துள்ளது. குறிப்பாக, லோக்சபா தொகுதி எண்ணிக்கை அதிகரித்தால் தமிழகத்தின் தொகுதி எண்ணிக்கை குறையும் என்ற அச்சத்தை தி.மு.க. முன்வைத்து வருகிறது. இதற்கு எதிராக, முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. சார்பில் கருப்புக்கொடி காட்டும் போராட்டமும், மசோதா நகல் எரிப்பு போராட்டமும் நடைபெற்றது. இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தொலைபேசியில் தொடர்புகொண்ட பழனிசாமி, “தமிழக தொகுதிகள் குறையும் என்ற தவறான புரிதலை தி.மு.க. பரப்பி வருகிறது. இதற்கு மத்திய அரசு தெளிவான விளக்கத்தை வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் சந்தோஷ் வெளியிட்ட கருத்தில், “தமிழக லோக்சபா தொகுதி எண்ணிக்கை 20 அதிகரித்து 59 ஆகும். இந்நிலையில் தி.மு.க. நடத்தும் போராட்டம் தேவையற்றது” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

“வருங்கால தலைமுறையினர் மீது அதிக நம்பிக்கை” – லண்டனில் மோகன் பாகவத்
“வருங்கால தலைமுறையினர் மீது அதிக நம்பிக்கை” – லண்டனில் மோகன் பாகவத்
9 மணி நேரங்கள் முன்பு
குற்றவாளிகள் எந்தக் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை - முதல்வர் விஜய் திட்டவட்டம்
குற்றவாளிகள் எந்தக் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை - முதல்வர் விஜய் திட்டவட்டம்
9 மணி நேரங்கள் முன்பு
காங்கிரஸைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சிகளும் அதிருப்தி; த.வெ.க. கூட்டணியில் புதிய சலசலப்பு
காங்கிரஸைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சிகளும் அதிருப்தி; த.வெ.க. கூட்டணியில் புதிய சலசலப்பு
9 மணி நேரங்கள் முன்பு
கோவில்களில் மொபைல் போன் தடை: பக்தர்கள் சிரமத்தால் விதிகளை மறுபரிசீலிக்க கோரிக்கை
கோவில்களில் மொபைல் போன் தடை: பக்தர்கள் சிரமத்தால் விதிகளை மறுபரிசீலிக்க கோரிக்கை
3 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்