உடனடி செய்தி

மேற்கு வங்கத்தில் சாதனை ஓட்டுப்பதிவு: 91.78% வாக்குப்பதிவு, SIR திருத்தத்திற்கு பின் உயர்வு

மேற்கு வங்கத்தில் சாதனை ஓட்டுப்பதிவு: 91.78% வாக்குப்பதிவு, SIR திருத்தத்திற்கு பின் உயர்வு
கொல்கத்தா: மேற்கு வங்க மாநில சட்டசபை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவில் வரலாறு காணாத அளவில் 91.78 சதவீத ஓட்டுப்பதிவு நடைபெற்றுள்ளது. மாநிலத்தில் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் பதிவானாலும், பெரும்பாலான பகுதிகளில் அமைதியாக தேர்தல் நடைபெற்றது. முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் மேற்கு வங்கத்தில், தேர்தலை முன்னிட்டு எஸ்.ஐ.ஆர். (Special Intensive Revision) எனப்படும் வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில் இறந்தவர்கள், இரட்டை பதிவு உள்ளிட்ட காரணங்களால் 90 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதனால் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 7.66 கோடியில் இருந்து 6.75 கோடியாக குறைந்தது. மொத்தம் 294 தொகுதிகளைக் கொண்ட மாநிலத்தில், முதல் கட்டமாக 16 மாவட்டங்களில் உள்ள 152 தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆரம்பத்தில் 18.76% ஆக இருந்த வாக்குப்பதிவு, காலை 11 மணிக்கு 41.11% ஆகவும், பிற்பகல் 1 மணிக்கு 62.18% ஆகவும் உயர்ந்தது. மாலை 5 மணிக்கு 89.93% பதிவான நிலையில், இறுதியில் 91.78% என்ற சாதனை அளவை எட்டியது. சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறுகள் காரணமாக தற்காலிக தாமதம் ஏற்பட்டது. இருப்பினும் மாற்று இயந்திரங்கள் கொண்டு வந்து வாக்குப்பதிவு தொடரப்பட்டது. பிர்பும், முர்ஷிதாபாத், ஜங்கல்மஹால் போன்ற பகுதிகளில் அரசியல் மற்றும் மத ரீதியான பதற்றங்கள் இருந்தபோதும், மக்கள் உற்சாகமாக வாக்களித்தனர். இதே நேரத்தில், சில இடங்களில் பா.ஜ.க மற்றும் திரிணமுல் காங்கிரஸ் கட்சியினருக்கு இடையே மோதல்கள் ஏற்பட்டன. வேட்பாளர்கள் மீது தாக்குதல், வாகன சேதம் போன்ற சம்பவங்களும் நடந்தன. மீதமுள்ள 142 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வரும் 29ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் 4ஆம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.

தொடர்புடைய செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
3 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
3 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்