உடனடி செய்தி

மெக்சிகோ கால்பந்து மைதானத்தில் துப்பாக்கிச்சூடு: 11 பேர் பலி, 12 பேர் படுகாயம்

மெக்சிகோ கால்பந்து மைதானத்தில் துப்பாக்கிச்சூடு: 11 பேர் பலி, 12 பேர் படுகாயம்

மெக்சிகோவின் குவானாஜீவாடோ மாகாணத்தில் உள்ள உள்ளூர் கால்பந்து மைதானத்தில் நடந்த பயங்கர துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர். கால்பந்து போட்டி நடைபெற்று கொண்டிருந்த போது, மர்ம கும்பல் ஒன்று வீரர்கள் மற்றும் பார்வையாளர்களை குறிவைத்து சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியது.

இந்த தாக்குதலில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது. தாக்குதலில் 12 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்திற்கு குவானாஜீவாடோ மாகாண மேயர் சீசர் பிரிட்டோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தாக்குதலின் பின்னணி மற்றும் குற்றவாளிகள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
4 மணி நேரங்கள் முன்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
4 மணி நேரங்கள் முன்பு
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
4 மணி நேரங்கள் முன்பு
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்