உடனடி செய்தி

மொராக்கோ, பிரான்ஸ் காலிறுதிக்கு முன்னேற்றம்; கனடா, பராகுவே வெளியேற்றம்

மொராக்கோ, பிரான்ஸ் காலிறுதிக்கு முன்னேற்றம்; கனடா, பராகுவே வெளியேற்றம்
பிபா உலகக் கோப்பை நாக்-அவுட் சுற்றில் நடைபெற்ற போட்டிகளில் மொராக்கோ மற்றும் பிரான்ஸ் அணிகள் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறின. கனடா மற்றும் பராகுவே அணிகளின் உலகக் கோப்பை பயணம் இதன்மூலம் நிறைவடைந்தது. மொராக்கோ - கனடா போட்டியில் முதல் பாதி கோலின்றி சமநிலையில் முடிந்தது. இரண்டாவது பாதியில் மொராக்கோ வீரர்கள் முழுமையான ஆதிக்கத்தை செலுத்தினர். 50 மற்றும் 82-வது நிமிடங்களில் அசெடின் உனாஹி இரு கோல்கள் அடித்து அணியின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தார். கூடுதல் நேரத்தின் 90+8-வது நிமிடத்தில் சுபியான் ரஹிமி மேலும் ஒரு கோல் அடிக்க, மொராக்கோ 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் பிரான்ஸ் மற்றும் பராகுவே அணிகள் கடுமையாக மோதின. பராகுவேவின் வலுவான தடுப்பாட்டத்தால் பிரான்ஸ் நீண்ட நேரம் கோல் அடிக்க முடியாமல் திணறியது. 70-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கிலியன் எம்பாப்பே துல்லியமாக கோலாக மாற்றினார். அந்த ஒரே கோலே போட்டியின் வெற்றியை தீர்மானித்தது. 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற பிரான்ஸ் அணி காலிறுதிக்குள் நுழைந்தது. கடுமையாக போராடிய பராகுவே அணி தோல்வியுடன் தொடரிலிருந்து வெளியேறியது.

தொடர்புடைய செய்திகள்

இந்திய பெண்கள் ஹாக்கி அணி அதிரடி; தென் ஆப்ரிக்காவை 6-1 என வீழ்த்தி அபார வெற்றி
இந்திய பெண்கள் ஹாக்கி அணி அதிரடி; தென் ஆப்ரிக்காவை 6-1 என வீழ்த்தி அபார வெற்றி
18 மணி நேரங்கள் முன்பு
காலே டெஸ்ட்: 460 ரன் குவித்த இந்தியா; தேவ்தத் 167, ஜுரெல் அரைசதம்
காலே டெஸ்ட்: 460 ரன் குவித்த இந்தியா; தேவ்தத் 167, ஜுரெல் அரைசதம்
2 நாட்கள் முன்பு
காலே டெஸ்ட்: தேவ்தத் படிக்கல் அபார சதம்; இந்தியா 288/2
காலே டெஸ்ட்: தேவ்தத் படிக்கல் அபார சதம்; இந்தியா 288/2
3 நாட்கள் முன்பு
உலகக் கோப்பை ஹாக்கியில் இந்தியா வெற்றி; வேல்ஸை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தியது
உலகக் கோப்பை ஹாக்கியில் இந்தியா வெற்றி; வேல்ஸை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தியது
3 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்