மும்பையில் கனமழை கொந்தளிப்பு: 10 பேர் பலி; ரெட் அலர்ட் அறிவிப்பு
மகாராஷ்டிர மாநிலத்தின் மும்பை, தானே, ராய்கட் மற்றும் பால்கர் மாவட்டங்களில் பெய்த கனமழையால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. முக்கிய சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், புறநகர் ரயில் சேவைகளும் தடைபட்டுள்ளன.
கனமழையால் மும்பை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதுடன், மும்பை பல்கலைக்கழகத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
கர்ஜத்–லோனாவாலா மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் மும்பை–புனே ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தண்டவாளங்களில் விழுந்த பாறைகளை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், மும்பை, தானே, பால்கர் மற்றும் ராய்கட் மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் விடுத்துள்ளது. பலத்த காற்றுடன் கனமழை தொடரும் என்பதால், அவசியமின்றி பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
100% உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவான விக்ரம்-1 வெற்றி
4 மணி நேரங்கள் முன்பு
தவெகவில் சீனியர்களுக்கு மரியாதை இல்லை? அதிமுக நிர்வாகிகளுக்கு கடம்பூர் ராஜூ எச்சரிக்கை
4 மணி நேரங்கள் முன்பு
பழநி கோவில் நில மோசடி: பல மாவட்டங்களில் சி.பி.சி.ஐ.டி. அதிரடி சோதனை; முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
4 மணி நேரங்கள் முன்பு
அரசு வழக்கறிஞர் நியமனம் குறித்து வழக்கு தொடர்ந்த த.வெ.க. நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்
4 மணி நேரங்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்