உடனடி செய்தி

நேபாள தேர்தலில் இளைஞர் அலை: ராப் பாடகர் பாலேந்திர ஷா தலைமையிலான தேசிய சுதந்திர கட்சி வெற்றி

நேபாள தேர்தலில் இளைஞர் அலை: ராப் பாடகர் பாலேந்திர ஷா தலைமையிலான தேசிய சுதந்திர கட்சி வெற்றி

நேபாளத்தில் நடைபெற்ற பார்லிமென்ட் தேர்தலில், ராப் இசை பாடகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய பாலேந்திர ஷா தலைமையிலான தேசிய சுதந்திர கட்சி (RSP) பெரும்பான்மை இடங்களில் முன்னிலை வகித்து ஆட்சி அமைக்க உள்ளது.

சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடை, ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் வேலைவாய்ப்பு பற்றாக்குறை போன்ற காரணங்களால் நேபாள இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அரசுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைநகர் காத்மாண்டுவில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஒன்றுகூடி பார்லிமென்ட் நோக்கி பேரணி நடத்தினர்.

இந்த போராட்டங்கள் வன்முறையாக மாறியதால் பலர் உயிரிழந்தனர். அதன் பின்னர் அந்நாட்டு பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அரசு ராஜினாமா செய்தது. பின்னர் இடைக்கால அரசு பொறுப்பேற்று சமூக ஊடகத் தடையை நீக்கியது.

இந்நிலையில் நடைபெற்ற பொதுத்தேர்தலில், அனுபவம் வாய்ந்த மூத்த அரசியல் தலைவர்களை எதிர்த்து 35 வயதான பாலேந்திர ஷா போட்டியிட்டு முன்னிலை பெற்றுள்ளார். ஊழலற்ற நிர்வாகம் மற்றும் இளைஞர்களுக்கு அதிகாரம் என்ற முழக்கத்துடன் அவர் தேசிய அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
5 மணி நேரங்கள் முன்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
5 மணி நேரங்கள் முன்பு
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
5 மணி நேரங்கள் முன்பு
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்