உடனடி செய்தி

பாகிஸ்தானில் அரசு ஊழியர்களின் சம்பளம் 30% வரை குறைப்பு – எரிபொருள் விலை உயர்வு காரணம்

பாகிஸ்தானில் அரசு ஊழியர்களின் சம்பளம் 30% வரை குறைப்பு – எரிபொருள் விலை உயர்வு காரணம்
மேற்காசியாவில் நடைபெற்று வரும் போரின் தாக்கம் உலகளவில் எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது. இதன் தாக்கம் அண்டை நாடான பாகிஸ்தானிலும் கடுமையாக உணரப்படுகிறது. இந்த சூழ்நிலையை சமாளிக்க, பாகிஸ்தான் அரசு பல சிக்கன நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. அதன்படி அரசு கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளில் பணியாற்றும் ஊழியர்களின் சம்பளத்தில் 5 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை குறைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த முடிவு, எரிபொருள் விலை உயர்வு மற்றும் பொருளாதார சவால்கள் குறித்து நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தின் பின்னர் எடுக்கப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும் அரசு செலவுகளை குறைக்கும் நடவடிக்கையாக, அரசு வாகனங்களுக்கு வழங்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் ஒதுக்கீடு 50 சதவீதம் வரை குறைக்கப்படும். அதோடு, அடுத்த இரண்டு மாதங்களில் 60 சதவீத அரசு வாகனங்கள் பயன்பாட்டில் இருந்து நீக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிக்கன நடவடிக்கைகள் மூலம் கிடைக்கும் சேமிப்புகள் அனைத்தும் மக்கள் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பழநி கோவில் நில மோசடி: சிபிசிஐடி அதிரடி; 4 பேர் கைது
பழநி கோவில் நில மோசடி: சிபிசிஐடி அதிரடி; 4 பேர் கைது
7 மணி நேரங்கள் முன்பு
டில்லியில் கனமழை கொட்டியது: சாலைகள் வெள்ளத்தில் மூழ்கி கடும் போக்குவரத்து பாதிப்பு
டில்லியில் கனமழை கொட்டியது: சாலைகள் வெள்ளத்தில் மூழ்கி கடும் போக்குவரத்து பாதிப்பு
9 மணி நேரங்கள் முன்பு
தமிழக மாணவர்களின் ஒழுக்கம் இந்தியாவுக்கே முன்மாதிரி; பட்டமளிப்பு விழாவில் கவர்னர் அர்லேக்கர் பாராட்டு
தமிழக மாணவர்களின் ஒழுக்கம் இந்தியாவுக்கே முன்மாதிரி; பட்டமளிப்பு விழாவில் கவர்னர் அர்லேக்கர் பாராட்டு
9 மணி நேரங்கள் முன்பு
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: கருணை அடிப்படையிலான அரசு பணி நியமனத்தை ரத்து செய்த உயர்நீதிமன்றம்
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: கருணை அடிப்படையிலான அரசு பணி நியமனத்தை ரத்து செய்த உயர்நீதிமன்றம்
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்