போக்சோ வழக்கில் மதபோதகருக்கு 7 ஆண்டு சிறை | திருநெல்வேலி நீதிமன்ற தீர்ப்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட போக்சோ வழக்கில், கிறிஸ்தவ மதபோதகருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வள்ளியூர் அருகே வடக்கன்குளத்தை சேர்ந்த 58 வயதான மதபோதகர் ஒருவர், 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜெபக்கூட்டத்தில் கலந்து கொண்ட எட்டு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து வள்ளியூர் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இந்த வழக்கு திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. வழக்கை பரிசீலித்த நீதிபதி, குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.10,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.1 லட்சம் நிவாரணத் தொகை வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
3 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
3 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
4 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்