உடனடி செய்தி

போர் நிறுத்தம் பிறகு: 2 மாத இடைவெளிக்குப் பின் ஈரானில் சர்வதேச விமான சேவை மீண்டும் தொடக்கம்

போர் நிறுத்தம் பிறகு: 2 மாத இடைவெளிக்குப் பின் ஈரானில் சர்வதேச விமான சேவை மீண்டும் தொடக்கம்
டெஹ்ரான்: கடந்த இரண்டு மாதங்களாக போர் பதற்றத்தால் முடங்கியிருந்த ஈரானின் சர்வதேச விமான சேவைகள் தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. பிப். 28ஆம் தேதி முதல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானில் தாக்குதல் நடத்தியதால், அந்நாட்டின் வான்வழிப் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டது. இதனால் சர்வதேச விமான சேவைகளும் பாதிக்கப்பட்டன. தற்போது போர் நிறுத்தம் அமலில் உள்ளதால், ஈரான் உலக நாடுகளுடன் மீண்டும் விமான இணைப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள இமாம் கொமேனி சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று முதல் வணிக விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. இஸ்தான்புல், மஸ்கட் மற்றும் மதீனா போன்ற நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டன. குறிப்பாக இஸ்தான்புல் நோக்கி குறைந்தது மூன்று விமானங்கள் புறப்பட்டன. இதேவேளை, அப்பகுதியில் நிலவும் பாதுகாப்பு சூழ்நிலை காரணமாக இந்தியர்கள் ஈரானுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்று டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் முன்பே அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
1 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
1 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
1 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்