ரூ.3000 கோடி வசூல் சாதனை படைத்த ரன்வீர் சிங் ‘துரந்தர்’ படம்
புதுடில்லி: பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடித்த ‘துரந்தர்’ திரைப்படம் உலகளவில் வசூல் சாதனையை படைத்துள்ளது. இந்த படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள் இணைந்து ரூ.3,000 கோடி வசூலை கடந்துள்ளன.
கடந்த டிசம்பர் மாதம் வெளியான ‘துரந்தர்’ திரைப்படத்தின் முதல் பாகம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்திய ராணுவத்தில் பணிபுரியும் உளவாளியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம், உலகளவில் ரூ.1300 கோடி வசூலை எட்டியது.
இதனைத் தொடர்ந்து ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ என்ற பெயரில் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியானது. முதல் பாகத்தை விட அதிகமான திரில்லும், உணர்ச்சியும் கொண்ட இந்த படம் ரசிகர்களை கவர்ந்தது. குறிப்பாக சமகால அரசியல் மற்றும் பாதுகாப்பு சம்பவங்களுடன் இணைக்கப்பட்ட கதை, பார்வையாளர்களை ஆழமாக சிந்திக்க வைத்தது.
இரண்டாம் பாகம் எதிர்பார்ப்பை மீறி வெற்றி பெற்றதால், ரசிகர்கள் பலமுறை திரையரங்குகளில் படம் பார்த்தனர். இதன் மூலம் படம் ரூ.1700 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
இரண்டு பாகங்களும் சேர்த்து தற்போது வரை ரூ.3,019 கோடி வசூல் செய்து இந்திய சினிமா வரலாற்றில் புதிய சாதனையை உருவாக்கியுள்ளது. இதற்கு முன்பு பாகுபலி 1 மற்றும் 2 பாகங்கள் சேர்த்து ரூ.2438 கோடி வசூல் செய்ததே அதிகபட்சமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
1 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
1 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
1 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்