உடனடி செய்தி

"ஊழல் பற்றி பேச ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை”முதலமைச்சர் பழனிசாமி விலாசல்

"ஊழல் பற்றி பேச ஸ்டாலினுக்கு எந்த  தகுதியும் இல்லை”முதலமைச்சர் பழனிசாமி விலாசல்

ஊழல் காரணமாக தமிழகத்தில் கலைக்கப்பட்ட ஆட்சி திமுகவின் ஆட்சி தான் என்றும், அந்தக்கட்சியின் தலைவராக உள்ள ஸ்டாலின் ஊழல் குறித்து பேசவே தகுதியே அற்றவர் எனவும் முதமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளுத்து வாங்கினார்.

தென் சென்னை மக்களவை தொகுதி வேட்பாளர் ஜெயவர்தனை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி சென்னையில் பல்வேறு இடங்களில் பரப்புரையை மேற்கொண்டார். கிண்டி, திருவான்மியூர், மயிலாப்பூர், எம்.ஜி.ஆர்.நகர், ஜாபர்கான் பேட்டை உள்ளிட்ட இடங்களில் பரப்புரையில் ஈடுபட்ட முதல்வர், ஊழல் காரணமாக கலைக்கப்பட்ட ஆட்சி திமுகவின் ஆட்சி என்றார். இதனால் ஊழல் குறித்து பேசவே ஸ்டாலினுக்கு தகுதி இல்லை என்றார்.

வீடு இல்லாத ஏழை-எளிய மக்களுக்கு அடுக்குமாடி வீடுகள் கட்டித்தரப்படும் என்று கூறிய முதல்வர், மக்களுக்கு பயன்தரும் பல்வேறு நலத்திட்டங்களை அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளதாக தெரிவித்தார்.

சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் இரும்பு கரம் கொண்டு அடக்கப்படுவார்கள் என கூறிய முதல்வர், நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் எனத் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
3 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
3 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்