உடனடி செய்தி

4 மணி நேரத்தில் அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை!!!

4 மணி நேரத்தில் அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை!!!
கோவில்பட்டியில் 4 மணி நேரத்தில் சுரங்கப்பாதை அமைத்து சாதனை படைத்துள்ளது இந்திய ரயில்வே துறை. பொதுவாகவே நமது நாட்டில் எந்தவொரு அரசாங்க பனி நிறைவடைய சில வருடங்கள் தேவைப்படும். இதுதான் இதுவரை நமக்கு கிடைத்த அனுபவங்கள். அதிசயம் ஆனால் உண்மை என்பது போல 4 மணி நேரத்தில் ரயில் பாதையை கடக்க சுரங்கப்பாதை அமைத்து , உடனடியாக போக்குவரத்து செல்லவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கோவில்பட்டியில் லட்சுமி மில் அருகே உள்ள ரயில் பாதையை கடக்க மேம்பாலம் அமைத்த பின்னரும் , அங்கே இருந்த கிராஸ்ஸிங்கை அகற்ற மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த கிராஸ்ஸிங்கை அகற்றினால் தங்கள் ஊருக்கு செல்ல அதிகமான தொலைவு பயணிக்க வேண்டும் என்பது அவர்களது கவலை. அதனை போக்குவதற்கு சுரங்கப்பாதை அமைக்க முடிவு செய்தது ரயில்வே துறை. ஆனால் ரயில் போக்குவரத்திற்கு பாதிப்பு இல்லாமல் இந்த சுரங்கப்பாதை அமைக்க வேண்டும். அதனால் மிகக்குறைந்த கால அவகாசத்தில் இந்த சுரங்கப்பாதை அமைக்க வேண்டும். எனவே மிகைத்திறமையாக 4 மணி நேரத்தில் சுரங்கப்பாதையை முடித்து அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் அற்பணிக்கப்பட்டது . [embed]https://www.youtube.com/watch?v=oKEMfibSqgA[/embed]

தொடர்புடைய செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
1 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
1 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
1 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்