உடனடி செய்தி

தெலுங்கானாவில் தொலைபேசி ஒட்டுக் கேட்பு: 1,500 கோடி ரூபாய் பறிப்பு – ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு

தெலுங்கானாவில் தொலைபேசி ஒட்டுக் கேட்பு: 1,500 கோடி ரூபாய் பறிப்பு – ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு

ஹைதராபாத்:
தெலுங்கானாவில் முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான பி.ஆர்.எஸ். ஆட்சிக் காலத்தில், எதிர்க்கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலரின் தொலைபேசி உரையாடல்கள் சட்டவிரோதமாக ஒட்டுக் கேட்கப்பட்டதாக முதல்வர் ரேவந்த் ரெட்டி கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இந்த தொலைபேசி ஒட்டுக் கேட்பு மூலம் பலரை மிரட்டி, தேர்தல் பத்திரங்கள் வழியாக சுமார் 1,500 கோடி ரூபாய் வரை பணம் வசூலிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், தொழிலதிபர்களிடம் இருந்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் மற்றும் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மிகக் குறைந்த விலைக்கு பறிக்கப்பட்டதாகவும் கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வரும் நிலையில், சமீபத்தில் முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பி.ஆர்.எஸ். கட்சியை “பிளாக்மெயில் ராஜகீய சமிதி” என விமர்சித்த ரேவந்த் ரெட்டி, நீதிபதிகள், பத்திரிகையாளர்கள் என யாரையும் விடாமல் ஒட்டுக் கேட்பு நடைபெற்றதாக குற்றம்சாட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
4 மணி நேரங்கள் முன்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
4 மணி நேரங்கள் முன்பு
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
5 மணி நேரங்கள் முன்பு
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்