செய்திகள்
⚡ உடனடி செய்தி
தமிழக சட்டசபை தேர்தல் 2026: ஓட்டுப்பதிவு துவக்கம்; மக்கள் உற்சாகமாக வாக்களிப்பு
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் இன்று சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கியது. மொத்தம் 5.73 கோடி வாக்காளர்கள் இந்த தேர்தலில் பங்கேற்கின்றனர். இதில் 2.80 கோடி ஆண் வாக்காளர்கள், 2.93 கோடி பெண் வாக்காளர்கள் மற்றும் 7,728 மூன்றாம் பாலினத்தவர்கள் அடங்குகின்றனர். மேலும், 14.5 லட்சம் முதல் முறை வாக்காளர்களும் இந்த தேர்தலில் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்துகின்றனர்.
மாநிலம் முழுவதும் 33,133 இடங்களில் 75,064 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 1.06 லட்சம் ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. 234 தொகுதிகளில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும்.
இந்த தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க., நாம் தமிழர் கட்சி ஆகியவற்றுக்கு இடையே நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. தி.மு.க. தலைமையில் 22 கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்துள்ளன. அ.தி.மு.க.வும் 12 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.
முக்கிய தலைவர்கள் பலரும் களத்தில் உள்ளனர். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியில், அ.தி.மு.க. தலைவர் பழனிசாமி சேலம் எடப்பாடி தொகுதியில், த.வெ.க. தலைவர் விஜய் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதிகளில், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் காரைக்குடி தொகுதியில் போட்டியிடுகின்றனர். முக்கிய தொகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
1 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
1 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
2 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்