தமிழக சட்டசபை தேர்தல்: இன்று முதல் வேட்பு மனு தாக்கல் – நான்கு முனை போட்டி தீவிரம்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும், முக்கிய அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளதால், நான்கு முனை போட்டி நிலை உருவாகியுள்ளது.
இந்த தேர்தலில், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணிகள் மட்டுமின்றி, த.வெ.க. மற்றும் நாம் தமிழர் கட்சியும் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகின்றன. இதனால், பல தொகுதிகளில் கடும் போட்டி எதிர்பார்க்கப்படுகிறது.
வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறும். ஆனால் இடைப்பட்ட நாட்களில் அரசு விடுமுறைகள் உள்ளதால், வேட்பாளர்களுக்கு குறைந்த நாட்களே கிடைக்கின்றன. தினமும் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே மனு தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மனு தாக்கலின் போது கூட்டம் கூடாது, விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக, பறக்கும் படைகள் மற்றும் துணை ராணுவப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், ராமதாஸ் - சசிகலா அணியும், புதிய தமிழகம் கட்சியும் தனித்து போட்டியிடத் தயாராகி வருகின்றன. இதனால் வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் நாளிலேயே நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பெரும்பாலான தொகுதிகளில் மனு தாக்கல் செய்ய உள்ளனர். அதேபோல், தி.மு.க. மற்றும் த.வெ.க. வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்ய தொடங்கியுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
2 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
2 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்