தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை: அண்ணாமலை குற்றச்சாட்டு
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் பா.ஜ.க சார்பில் நடைபெற்ற ‘நாளை நமதே – தமிழ்நாடும் நமதே’ தெருமுனை பிரசார கூட்டத்தில் மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாக கூறினார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் 17 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தையும், கிருஷ்ணகிரியில் 2 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை நடந்த சம்பவத்தையும் எடுத்துக்காட்டினார்.
மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநிலத்தில் ஆயிரக்கணக்கான கொலைகள் மற்றும் கற்பழிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
அதே நேரத்தில் குடும்பங்களின் கடன் சுமை அதிகரித்துள்ளதாகவும், அரசின் பல திட்டங்கள் மக்கள் நலனுக்கு பயனளிக்கவில்லை என்றும் அவர் விமர்சித்தார். வரும் தேர்தலில் மக்கள் சரியான முடிவு எடுப்பார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
1 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
1 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
1 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்