உடனடி செய்தி

திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவில் நிலங்கள் ரூ.10,000 கோடி மதிப்பில் ஆக்கிரமிப்பு? அறிக்கை தர அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவில் நிலங்கள் ரூ.10,000 கோடி மதிப்பில் ஆக்கிரமிப்பு? அறிக்கை தர அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், செங்கல்பட்டு மாவட்டம் திருநீர்மலையில் உள்ள ரங்கநாத பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான நிலங்கள் பெருமளவில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. தாம்பரத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சந்தானம் தாக்கல் செய்த மனுவில், திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவிலுக்கு முன்பு சுமார் 1,050 ஏக்கர் நிலங்கள் இருந்ததாக வருவாய் ஆவணங்களில் பதிவுகள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது கோவிலின் பெயரில் 157 ஏக்கர் நிலங்கள் மட்டுமே உள்ளதாகவும், மீதமுள்ள நிலங்கள் போலி ஆவணங்கள் மூலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ரூ.10,000 கோடி வரை இருக்கும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பல கோவில்களின் நிலங்களும் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார். இதில்: வீரராகவ கோவிலுக்குச் சொந்தமான 5.50 ஏக்கர் நாட்டரசன்பட்டு ஸ்ரீ ஆலவட்டம்மன் கோவிலுக்குச் சொந்தமான 13.52 ஏக்கர் நாட்டரசன்பட்டு கற்பக விநாயகர் கோவிலுக்குச் சொந்தமான 82 சென்ட் குன்றத்தூர் காமாட்சி அம்மன் கோவில் மற்றும் விநாயகர் கோவில் நிலங்கள் போன்ற பல கோவில்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நில ஆவணங்களில் மாற்றங்கள் செய்து பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதனால் தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் கே. சுரேந்தர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எம்.ஏழுமலை ஆஜராகி, பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார். இதையடுத்து, இந்த மனுவுக்கு இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கை தள்ளிவைத்தது.

தொடர்புடைய செய்திகள்

மின் தடை விவகாரம்: ‘பியூஸ் கேரியர்’ காரணமா? பழனிசாமி கடும் விமர்சனம்
மின் தடை விவகாரம்: ‘பியூஸ் கேரியர்’ காரணமா? பழனிசாமி கடும் விமர்சனம்
20 மணி நேரங்கள் முன்பு
போக்சோ வழக்கில் மதபோதகருக்கு 7 ஆண்டு சிறை | திருநெல்வேலி நீதிமன்ற தீர்ப்பு
போக்சோ வழக்கில் மதபோதகருக்கு 7 ஆண்டு சிறை | திருநெல்வேலி நீதிமன்ற தீர்ப்பு
20 மணி நேரங்கள் முன்பு
ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது பாலியல் புகார்; சிங்கப்பெண் படை மீது இபிஎஸ் கேள்வி
ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது பாலியல் புகார்; சிங்கப்பெண் படை மீது இபிஎஸ் கேள்வி
20 மணி நேரங்கள் முன்பு
இந்திய விமானங்களுக்கு அச்சுறுத்தல்? பாகிஸ்தான் சதிக்கு கடும் நடவடிக்கை தேவை: ஹிந்து முன்னணி
இந்திய விமானங்களுக்கு அச்சுறுத்தல்? பாகிஸ்தான் சதிக்கு கடும் நடவடிக்கை தேவை: ஹிந்து முன்னணி
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்