செய்திகள்
⚡ உடனடி செய்தி
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப வழக்கு: கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கைக்கு ராம ரவிக்குமார் கண்டனம்
திருப்பரங்குன்றம் மலை
கார்த்திகை தீப வழக்கு –
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கைக்கு கண்டனம்!!
திருப்பரங்குன்றம் மலை கார்த்திகை
தீப வழக்கு தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் திரு. மு. வீரபாண்டியன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை, வழக்கின் உண்மை நிலை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் வெளியிடப்பட்டுள்ளதாக நான் கருதுகிறேன்.
திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கான கோரிக்கை என்பது எந்த மதத்தினருக்கும் எதிரான கோரிக்கையோ, யாருடைய உரிமையையும் பறிக்கும் நோக்கமோ அல்ல. இது வரலாற்று, ஆன்மிக மற்றும் பாரம்பரிய வழிபாட்டு மரபுகளை மீட்டெடுக்கும் உரிமை தொடர்பான கோரிக்கையாகும்.
எங்கள் மனுவில் சிக்கந்தர் தர்காவை அகற்ற வேண்டும் என்றோ, அதன் உரிமையை மறுக்க வேண்டும் என்றோ எந்த கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை.
அப்படியிருக்கும்போது, கார்த்திகை தீப வழிபாட்டை தர்கா அகற்றும் முயற்சியாக சித்தரிப்பது உண்மைக்கு புறம்பானதாகும்.
இந்த விவகாரத்தில் மதிப்பிற்குரிய நீதிபதி திரு. G.R. சுவாமிநாதன் அவர்கள் வழங்கிய உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தபோதும், பின்னர் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு அந்த உத்தரவை உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் தீர்ப்புகளின் முழு பின்னணியையும் கருத்தில் கொண்டு பொதுக் கருத்துகள் வெளியிடப்பட வேண்டும்.
நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள விவகாரம் குறித்து அரசியல் நோக்கத்துடன் கருத்துரைப்பதும், நீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ள அம்சங்களை தவறாக விளக்குவதும் தவிர்க்கப்பட வேண்டும்.
நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் நீதிமன்ற நடைமுறைகள் அனைவராலும் மதிக்கப்பட வேண்டியவை.
திருப்பரங்குன்றம் மலையின் வரலாறு, கல்வெட்டுகள், பழமையான வழிபாட்டு மரபுகள் மற்றும் அரசுப் பதிவுகள் அனைத்தும் நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு உட்பட்டுள்ளன.
எனவே, வழக்கின் உண்மை நிலையை மாற்றி அரசியல் ஆதாயம் தேடுவது ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.
தமிழக அரசு எந்தவொரு அரசியல் அழுத்தத்திற்கும் இடமளிக்காமல், நீதிமன்றத்தில் வரலாற்றுச் சான்றுகள், ஆவணங்கள் மற்றும் சட்டப்பூர்வ ஆதாரங்களின் அடிப்படையில் தனது நிலைப்பாட்டை முன்வைக்க வேண்டும். ஜனநாயக நாட்டில் அனைத்து மக்களின் சட்டபூர்வமான வழிபாட்டு உரிமைகளும் சமமாக மதிக்கப்பட வேண்டும்.
திருப்பரங்குன்றம் மலையின் பாரம்பரிய மற்றும் வரலாற்று வழிபாட்டு உரிமைகள் சட்டத்தின் அடிப்படையில் பாதுகாக்கப்படும் என்றும்,
நீதிமன்ற உத்தரவுகள் முறையாக செயல்படுத்தப்படும் என்றும் நாங்கள் நம்புகிறோம்.
இந்த ஆண்டு கார்த்திகை தீபம் பாரம்பரிய முறையில் ஏற்றப்படுவதற்கான சூழல் உருவாகும் என்ற நம்பிக்கையையும் தெரிவிக்கிறோம்.
மேலும், நீதிமன்ற விசாரணையில் உள்ள விவகாரங்கள் குறித்து வெளியிடப்படும் பொது அறிக்கைகள் நீதிமன்ற நடவடிக்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் நீதிமன்றம் தேவையான முறையில் பரிசீலிக்க வேண்டும் என்பதையும் கேட்டுக்கொள்கிறோம்.
ராம ரவிக்குமார்
மனுதாரர் –
திருப்பரங்குன்றம் மலை
கார்த்திகை தீப வழக்கு
தலைவர்,
இந்து தமிழர் கட்சி
96553 65696
தொடர்புடைய செய்திகள்
பாஜவை விட்டு வெளியேறிய அண்ணாமலை: புதிய அரசியல் இயக்கம் தொடக்கம், அடுத்த பொதுத்தேர்தலில் போட்டி உறுதி
2 மணி நேரங்கள் முன்பு
கோவை கோவில்களில் கண்காணிப்பு தீவிரம் | அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை
16 மணி நேரங்கள் முன்பு
பள்ளி கட்டட திறப்பு விழாவில் பரபரப்பு: மேயர் பிரியா - த.வெ.க. எம்.எல்.ஏ. பல்லவி இடையே மோதல்
16 மணி நேரங்கள் முன்பு
“ஓட்டுக்கு ரூ.2,000 வழங்கப்பட்டது” – த.வெ.க. முன்னாள் வேட்பாளர் பேச்சால் சர்ச்சை
16 மணி நேரங்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்