உடனடி செய்தி

உருளைக்கிழங்கு - பெப்சி - விவசாயி - உண்மை என்ன?

உருளைக்கிழங்கு - பெப்சி - விவசாயி - உண்மை என்ன?

உருளைக் கிழங்கில் FC5 வகை உருளைக் கிழங்குகளை பெப்சி 1989களில் இருந்து பயன்படுத்துகிறது. இதே போல் mcdonald, Checkers & Rally, Ore-Ida போன்ற பல உணவு தயாரிக்கும் நிறுவனங்களும் கூட தங்கள் பொருட்களுக்கென்று தனிபட்டவித உருளைக்கிழங்குகளைப் பயன்படுத்துகிறார்கள் - அது தங்கள் வாடிக்கையாளர்களுக்குப் பிடிக்கும் விதமான சுவையுடைய உணவுகளைக் கொடுப்பதற்கு, இன்னொரு புறம் உருளைக் கிழங்கு உற்பத்தி தட்டுப்பாடு ஏற்பட்டு உற்பத்தியில் விற்பனையில் வீழ்ச்சி சந்திக்காமல் இருக்க. இப்போது உருளைக் கிழங்கையே பயிரிடக் கூடாது , அதை பெரும் நிறுவனங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு போகிறார்கள் என்ற விதமாக விசயத்தைக் குழப்பக் கூடாது. அவர்கள் சொல்வது FC5 வகை உருளைக் கிழங்குகளைப் பயன்படுத்தக் கூடாது என்று தானே ஒழிய உருளைக் கிழங்கையே பயிரிடக் கூடாது என்று அல்ல.

அது என்ன FC5 உருளைக் கிழங்கு??

https://www.youtube.com/watch?v=PhX6NSdwqCs

நான் மேலே சொன்னது போல வைரஸ் கிருமிகள் தாக்குதலை எதிர்கொள்ளும் திறனுடன் , ஒரு ஏக்கருக்கு முறையான மகசூல் உற்பத்தி கொடுக்கும் வலத்துடன் வீரியம் கொண்ட கிழங்குகளை பயிரிடுவதற்கு பெப்சி முடிவு செய்து அவன் இந்த உருளைக் கிழங்கை மேம்படுத்த சில100 கிழங்கு ஆய்வாளர்களுக்குப் பல கோடி சம்பளம் போட்டு , அதில் பல ஆயிரம் வேலையாட்களை ஆய்வுக் கூடங்களில் அமர்த்தி , அதற்காகவே தனிப்பட்ட விதத்தில் genetic engineering laboratory உருவாக்கி பின் அந்த ஆய்வுகளின் மூலம் கண்டிபிடிக்கபட்ட மேம்படுத்தப்பட்ட உருளைக் கிழங்கை ஐ நா முதல் Indian Council of Agricultural Research அனைத்து விதமான சோதனை கூடங்களிலும் சமர்ப்பணம் செய்து அதற்குச் சரியான காப்புரிமை அங்கிகாரம் பெற்றும் அது எந்தவிதத்திலும் மனிதனையோ விவசாய நிலத்தையோ பாதிப்படையச் செய்யாது என்ற உத்தரவாதமும் வாங்கி இறுதியாக விவசாயம் செய்யக் கொண்டு வருகிறான். இதற்காக 1000 கோடிகள் வரை செலவு செய்கிறார்கள்.

அந்த வகையில் உருவானது தான் இந்த FC5 உருளை கிழங்கு.

அப்படி செலவு செய்து கொண்டு வந்த உருளைக் கிழங்கை இறக்குமதி செய்தால் இந்தியா போன்ற நாடுகளில் உள்ள விவசாயிகள் பாதிப்படைவர் எனவே உருளைக் கிழங்கு இறக்குமதி செய்யக்கூடாது வேண்டும் என்றால் அந்த அந்த நாடுகளில் உள்ள விவசாயிகளை வைத்து விவசாயம் செய்து தங்களுக்குத் தேவையான உருளைக் கிழங்குகளை உற்பத்தி செய்து கொள்ளலாம் இதனால் உள்ளூர் விவசாயிகள் பாதிப்படைய மாட்டார்கள் என்று நாடுகள் கூற அதையும் ஏற்றுக் கொண்டு அவன் உள்ளூர் விவசாயிகளிடம் அதைக் கொடுத்து விவசாயம் செய்து அதை மொத்தமாகக் கொள்முதல் செய்து அதை தங்கள் உணவுப் பொருட்கள் தயாரிக்கும் உற்பத்திக்குப் பயன்படுத்த இறுதியாக அதே உருளைக் கிழங்கை இன்னொரு நிறுவனமும் பயன்படுத்தி அதே பொருளை அதே சுவையில் கொடுத்தால் சரியா???

இப்போ இந்த விவசாயிகள் மீது 1 கோடி கேட்டு வழக்குப் போட்டது அப்போ சரியா மாரிதாஸ் என்று என்னைக் கேட்டால். அது சரியான அணுகுமுறை இல்லை என்பேன்.

அதாவது இங்கே இந்தியாவில் ICAR-Central Potato Research Institute உள்ளது. ஊட்டி , சிம்லா , ஜலந்தர் என்று சில இடங்களில் இயங்குகின்றன. இந்த ஆய்வுக் கூடங்களில் நாமும் அதே விதமாகத் தரம் மேம்படுத்தப்பட்ட CP Hybrid உருளைக் கிழங்குகளைப் பல விதமான வகைகளில் உற்பத்தி செய்கிறோம். அதை தான் நாடு முழுவதும் பெரும்பாலும் விவசாயிகள் பயன்படுத்த அறிவுரைகள் கொடுக்கப்படுகிறது அரசு வேளான் துறை அலுவலகர்களால். அந்த விதமான உருளைக் கிழங்குகளை எங்கே வாங்கிக்கொள்வது விவசாயம் செய்ய என்று அதன் வழி முறைகளை அவர்களுக்குக் கொடுத்த , நம்முடைய பயிர்களைப் பயிரிட அறிவுரை வழங்கி இருக்க வேண்டும். ஒருவேலை விவசாயிகளுக்கு அந்த விவரம் தெரிந்து இந்த உருளைக் கிழங்கு பயிரிடுகிறார்கள் என்றால் அது யாரால் கொள்முதல் செய்யப்படுகிறது , யார் விவசாயிகளைத் தவறான நடத்துகிறார்கள் என்று கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் தவிர விவசாயிகள் மீது வழக்குப் போடுவது முறையல்ல. ஏன் என்றால் பெரும்பாலான விவசாயிகள் அவ்வளவாக இந்த விதம் காப்புரிமை விழிப்புணர்வு கிடையாது படிப்பும் குறைவு. எனவே நேரடியாக விவசாயிகளை வழக்குப் போட்டு இழுப்பது தேவையற்ற சர்ச்சை.

அதாவது நீங்கள் அனைவரும் பெப்சி வழக்கை மட்டுமே பேச விரும்புகிறீர் ஆனால் அதே பெப்சி கொடுக்கும் உருளை வகைகளை உற்பத்தி செய்து மீண்டும் பெப்சி நிறுவனத்திற்கே அதனை விற்பனை செய்து நல்ல வருவாய் ஈட்டும் விவசாயிகளிடம் சென்று கேளுங்கள் - அவர்கள் அந்த நிறுவனத்தை ஆதரிப்பார்கள்.

சீனா Corporate Farming 2016ல் அனுமதி கொடுத்து தங்கள் நாட்டில் பெரும் நிறுவனங்கள் விவசாயத்தில் முதலீடு செய்யவும் புதிய முயற்சிகளைக் கொண்டு விவசாயத்தை மேம்படுத்தவும் சட்டத்தை மாற்றி அமைத்துவிட நம்ம ஊர் கம்யூனிஸ்ட் மட்டும் எப்போடா நாட்டை நாசம் செய்வோம் என்று தனியார் எதிர்ப்பு அந்த எதிர்ப்பு இந்த எதிர்ப்பு என்று கொஞ்சம் கூட வெக்கமே இல்லாமல் மக்களைத் தூண்டிவிடுகிறார்கள். இதில் நக்சல் அதன் ஆதரவாளர்கள் வழக்கம் போல அமெரிக்க எதிர்ப்பு ஆரம்பித்துவிட்டனர். தி இந்து போன்ற பத்திரிக்கைகளுக்கு வேறு வேலை இல்லை. உண்மையை எழுதும் எண்ணம் இல்லை. மக்களுக்கு உண்மையைச் சொல்வதில் இஷ்டமும் இல்லை இவர்களுக்கு.

தொடர்புடைய செய்திகள்

கோரிக்கைகளை ஏற்ற கட்சிகளுக்கே ஹிந்துக்கள் ஓட்டு: ஹிந்து உரிமை மீட்பு மாநில மாநாட்டில் தீர்மானம்
கோரிக்கைகளை ஏற்ற கட்சிகளுக்கே ஹிந்துக்கள் ஓட்டு: ஹிந்து உரிமை மீட்பு மாநில மாநாட்டில் தீர்மானம்
19 மணி நேரங்கள் முன்பு
கோவை வாக்காளர்களுக்கு பரிசு மழை? வெள்ளி நாணயம், டிவி வரை கிப்ட் என அரசியல் போட்டி
கோவை வாக்காளர்களுக்கு பரிசு மழை? வெள்ளி நாணயம், டிவி வரை கிப்ட் என அரசியல் போட்டி
19 மணி நேரங்கள் முன்பு
சபரிமலை ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் சந்தேக பரிவர்த்தனை: நீதிமன்றத்திற்கு அறிக்கை
சபரிமலை ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் சந்தேக பரிவர்த்தனை: நீதிமன்றத்திற்கு அறிக்கை
19 மணி நேரங்கள் முன்பு
ஈரான் தற்கொலைப் படகு தாக்குதல்: அமெரிக்க எண்ணெய் டேங்கர் கப்பலில் இந்தியர் பலி
ஈரான் தற்கொலைப் படகு தாக்குதல்: அமெரிக்க எண்ணெய் டேங்கர் கப்பலில் இந்தியர் பலி
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்