செய்திகள்
⚡ உடனடி செய்தி
வேலுமணி - முனுசாமி மோதல் | அதிமுகவில் புதிய பதவி சர்ச்சை
அதிமுகவில் சமீபத்திய உள்கட்சி பிரச்சினைகள் ஓரளவு அடங்கிய நிலையில், புதிய பதவி நியமனங்களை மையமாகக் கொண்டு மீண்டும் கருத்து வேறுபாடுகள் உருவாகியுள்ளன. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வகித்த தலைமை நிலையச் செயலர் பதவியும், விஸ்வநாதன் வகித்த துணை பொதுச்செயலர் பதவியும் தற்போது காலியாக உள்ளன.
இந்த பதவிகளை மீண்டும் வழங்க வேண்டும் என வேலுமணி மற்றும் விஸ்வநாதன் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், சமூக பிரதிநிதித்துவம் மற்றும் கட்சியின் உள் சமநிலையை கருத்தில் கொண்டு பழைய பதவிகளை மீண்டும் வழங்க தேவையில்லை என கே.பி. முனுசாமி கருத்து தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், சமீபத்தில் ஒன்றிணைந்த வேலுமணி தரப்பினருக்கும் கட்சி தலைமையினருக்கும் இடையே மீண்டும் கருத்து வேறுபாடு உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதே நேரத்தில், விஜயபாஸ்கர் மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோரின் அடுத்தகட்ட அரசியல் முடிவுகளும் அதிமுக வட்டாரங்களில் பேசுபொருளாக உள்ளன.
தொடர்புடைய செய்திகள்
வானத்தின் கண் இஓஎஸ்-05 வெற்றி: ஜிஎஸ்எல்வி எப்-17 மூலம் விண்ணில் நிலைநிறுத்திய இஸ்ரோ
8 மணி நேரங்கள் முன்பு
கோவில் சொத்து விவரங்கள் 90 நாட்களில் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட உத்தரவு
8 மணி நேரங்கள் முன்பு
கோவில் நிதி ஹிந்து சமூக நலனுக்கே பயன்படுத்தப்பட வேண்டும்: விஎச்பி வலியுறுத்தல்
9 மணி நேரங்கள் முன்பு
நடுபழனி கோவிலில் பல கோடி ரூபாய் மதிப்பிலான மரகத முருகர் சிலை திருட்டு
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்