Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
தொழில்நுட்பம் • 19 Feb 2026

JioHotstar-ல் ChatGPT ஒருங்கிணைப்பு: யூசர்களுக்கு என்ன புதிய அனுபவம்?

இந்தியா ஏஐ இம்பாக்ட் உச்சிமாநாட்டில், இந்திய ஸ்ட்ரீமிங் தளமான JioHotstar, OpenAI உடன் முக்கிய கூட்டாண்மையை அறிவித்தது. இதன் ஒரு பகுதியாக, ChatGPT அடிப்படையிலான வாய்ஸ் மற்றும் டெக்ஸ்ட் அசிஸ்டென்ட் ஜியோ ஹாட்ஸ்டார் ஆப்பில் நேரடியாக ஒருங்கிணைக்கப்படுகிறது.

என்ன புதிய அம்சம்?

இந்த கூட்டாண்மையின் மையத்தில் OpenAI API-களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ChatGPT-powered interface உள்ளது.

இந்த அம்சம் “Multilingual Cognitive Search” எனப்படும் பன்மொழி அறிவாற்றல் தேடலை செயல்படுத்தும்.

பயனர்கள்:

  • மனநிலைக்கு ஏற்ப (உதா: “சிரிப்பூட்டும் படம் வேண்டும்”)

  • சூழ்நிலைக்கு ஏற்ப (“என் பெற்றோர் வருகிறார்கள், குடும்பம் முழுக்க பார்க்க ஏதாவது பரிந்துரை செய்யுங்கள்”)

  • குறிப்பிட்ட கருப்பொருள் (“இரட்டையர்களைப் பற்றிய படங்கள்”)

பேசவோ அல்லது டைப் செய்யவோ செய்து பரிந்துரைகளை பெறலாம்.

என்ன பயன்?

✔️ என்ன பார்க்க வேண்டும் என்ற குழப்பம் குறையும்
✔️ பல இந்திய மொழிகளில் வாய்ஸ் & டெக்ஸ்ட் ஆதரவு
✔️ சூழல்-விழிப்புணர்வு (context-aware) பரிந்துரைகள்
✔️ பயனர் கேட்காத தொடர்புடைய உள்ளடக்கங்களையும் பரிந்துரை செய்யும்

நேரடி விளையாட்டுகளில் எப்படி உதவும்?

ஜியோ ஹாட்ஸ்டார் கூறுவதன்படி:

  • நேரடி போட்டிகளில் முக்கிய தருணங்கள்

  • வீரர்களின் புள்ளிவிவரங்கள்

  • ஸ்கோர் அப்டேட்கள்

  • சூழல் சார்ந்த நுண்ணறிவுகள்

இவற்றை உரையாடல் மூலம் நிகழ்நேரத்தில் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

Fidji Simo கூறுகையில்:

பார்வையாளர்கள் பார்ப்பதில் இருந்து கேட்பதற்கும், ஆர்வத்திலிருந்து சூழலுக்கும், ஆய்விலிருந்து பரிந்துரைக்கும் இயற்கையான மற்றும் தனிப்பட்ட அனுபவத்தை பெற முடியும்.

இந்த அம்சம் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நேரடி மற்றும் தேவைக்கேற்ப உள்ளடக்கங்களில் தொடங்கி, பின்னர் முழு தளத்திற்கும் விரிவடையும்.


ஜியோ வழங்கும் இலவச Google AI Pro – எப்படி பெறுவது?

Reliance Jio தற்போது 18 மாத இலவச Google AI Pro சந்தாவை வழங்குகிறது. இது Google மற்றும் Reliance Intelligence இணைந்து வழங்கும் திட்டமாகும்.

தகுதிகள்:

  1. ஆக்டிவ் ஜியோ சிம்

  2. அன்லிமிடெட் 5ஜி ரீசார்ஜ் பிளான்

பெறுவது எப்படி?

  1. உங்கள் ஸ்மார்ட்போனில் MyJio ஆப்பை திறக்கவும்

  2. Google AI Pro சலுகை பிரிவிற்கு செல்லவும்

  3. தகுதி சரிபார்த்து, சந்தாவை ஆக்டிவேட் செய்யவும்

இதன் மூலம் ஜெமினி (Gemini) பிரீமியம் அம்சங்களுக்கு 18 மாதங்கள் இலவச அணுகல் கிடைக்கும்.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்