Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 09 Feb 2026

ரத்து செய்யப்பட்ட TNPSC குரூப் 2 & 2A முதன்மைத் தேர்வு மார்ச் 15ல் நடைபெறும் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தேர்வு மையங்கள் ஒதுக்கீட்டில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக ரத்து செய்யப்பட்ட TNPSC குரூப் 2 மற்றும் குரூப் 2A முதன்மைத் தேர்வுகள் 2026 மார்ச் 15ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அறிவித்துள்ளது.

முன்னதாக பிப்ரவரி 8ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த இந்த தேர்வுகள், தேர்வர்களின் பெயர்கள் தேர்வு மையங்களில் இடம்பெறாததால் தமிழகம் முழுவதும் கடும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தேர்வுகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டன.

புதிய அறிவிப்பின்படி, தமிழ் மொழித் தகுதித் தேர்வு மற்றும் பொது அறிவு, பொது நுண்ணறிவு, பகுத்தறிவு ஆகிய தாள்கள் மார்ச் 15ஆம் தேதி நடைபெறும். இதற்கான ஹால் டிக்கெட் பிப்ரவரி 28க்குள் வெளியிடப்படும். தேர்வர்கள் OTR எண்ணை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்