உடனடி செய்தி

தி.மு.க பிரமுகரின் மிரட்டலுக்கு பயப்படாத சிறுமியின் தாய்!- பாலியல் புகாரில் வால்பாறை மாணவன் கைது

தி.மு.க பிரமுகரின் மிரட்டலுக்கு பயப்படாத சிறுமியின் தாய்!- பாலியல் புகாரில் வால்பாறை மாணவன் கைது

வால்பாறையில் 7 வயது சிறுமியை, பாலியல் வன்கொடுமை செய்த தி.மு.க பிரமுகரின் மகனை போலீஸார் கைது செய்தனர்.

கோயாம்புத்தூர் மாவட்டம், வால்பாறை அண்ணா நகரைச் சேர்ந்தவர் ரவி என்ற காக்கா ரவி.

இவர் முன்னாள் எம்.எல்.ஏ சிங்காரவேலுவின் உதவியாளராக இருந்திருக்கிறார். வால்பாறை நகராட்சி ஒப்பந்ததாரராகவும் பதவியில் இருக்கிறார். உள்ளாட்சித் தேர்தலின்போது, கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்டுத் தோல்வியடைந் தார்.

இவரின் மகன் கவின் (17) வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ் டூ படித்து வருகிறார். அதே பகுதியில் கூலி வேலை செய்து வரும் ஒருவரின் 7 வயது மகள் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், பள்ளிக்குச் சென்ற சிறுமியை ஏமாற்றி, கவின் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். பள்ளிக்குச் சென்ற சிறுமி வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், அவரை பல்வேறு இடங்களில் தேடிச் சென்றனர். கடைசியாக அந்தச் சிறுமி கவின் வீட்டில் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, பெற்றோரைக் கண்டதும், கவின் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி கூறியுள்ளார். இதனால், சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். ‘இந்த விஷயத்தை வெளியில் சொல்லக் கூடாது’ என்று சிறுமியின் குடும்பத்தினரைக் காக்கா ரவி மிரட்டியுள்ளார். அவரது மிரட்டலுக்கு அஞ்சாத சிறுமியின் தாய், பொள்ளாச்சி மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.

அந்தப் புகாரின் அடிப்படையில், கவின் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

கவின் பாலியல் வன்கொடுமை செய்ததில், சிறுமிக்கு பல்வேறு இடங்களில் காயங்கள் ஏற்பட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது, சிறுமியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகப் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அமைச்சர் பதவி சர்ச்சை: CBI விசாரணை எச்சரிக்கும் தினகரன்
அமைச்சர் பதவி சர்ச்சை: CBI விசாரணை எச்சரிக்கும் தினகரன்
13 மணி நேரங்கள் முன்பு
அதிமுக ஒன்றிணைக்க ரஜினி முயற்சி? மூத்த நிர்வாகிகளுடன் நேரடி பேச்சு
அதிமுக ஒன்றிணைக்க ரஜினி முயற்சி? மூத்த நிர்வாகிகளுடன் நேரடி பேச்சு
13 மணி நேரங்கள் முன்பு
ரங்கசாமி அதிரடி: அதிமுக மூலம் பா.ஜ.க-க்கு ‘செக்’ – பதவி பங்கீடு சர்ச்சை
ரங்கசாமி அதிரடி: அதிமுக மூலம் பா.ஜ.க-க்கு ‘செக்’ – பதவி பங்கீடு சர்ச்சை
14 மணி நேரங்கள் முன்பு
உதயநிதிக்கு எதிர்ப்பு: கோவையில் அர்ஜுன் சம்பத் தோப்புக்கரணம் பிரார்த்தனை
உதயநிதிக்கு எதிர்ப்பு: கோவையில் அர்ஜுன் சம்பத் தோப்புக்கரணம் பிரார்த்தனை
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்