உடனடி செய்தி
செய்திகள் ⚡ உடனடி செய்தி

நேபாள சுரங்கத்தில் 9 நாட்கள் போராட்டம்: உயிருடன் மீட்கப்பட்ட 2 தொழிலாளர்கள்

நேபாள சுரங்கத்தில் 9 நாட்கள் போராட்டம்: உயிருடன் மீட்கப்பட்ட 2 தொழிலாளர்கள்
நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான பனிப்பாறை சரிவு மற்றும் வெள்ளப் பேரிடரால் நீர்மின் திட்ட சுரங்கங்களில் சிக்கியிருந்த இரண்டு தொழிலாளர்கள், ஒன்பது நாட்கள் கழித்து உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேபாளம் - திபெத் எல்லைப் பகுதியில் உள்ள இமயமலை தொடரின் லாங்டாங் லிருங் சிகரத்தில் இருந்து ஆகஸ்ட் 26 அன்று பனிப்பாறையின் ஒரு பகுதி திடீரென சரிந்து விழுந்தது. இதனால் பனி, மண் மற்றும் பாறைகள் நதிக்குள் விழுந்து கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த பேரிடரால் நீர்மின் திட்டங்களின் சுரங்கங்களில் தண்ணீர் மற்றும் சேறு புகுந்ததால் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கினர். மத்திய நேபாளத்தில் உள்ள திரிசூலி 3ஏ நீர்மின் திட்ட சுரங்கத்தில் இருந்து மனித குரல்கள் கேட்கப்பட்டதைத் தொடர்ந்து, ராணுவம் மற்றும் மீட்புப் படையினர் தேடுதல் பணியை தீவிரப்படுத்தினர். தொடர்ந்து நடைபெற்ற மீட்புப் பணியில், சுரங்கத்திற்குள் சுமார் 558 அடி தொலைவில் சிக்கியிருந்த சஞ்சய் ஷா (30), கபீர் மகர்ஜன் (45) ஆகிய இரு தொழிலாளர்கள் ஒன்பது நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்டவர்களில் கபீர் மகர்ஜன் கவலைக்கிடமான நிலையில் ஹெலிகாப்டர் மூலம் காத்மாண்டுவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சஞ்சய் ஷா உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே, இந்த பேரிடரில் ரசுவா மற்றும் நுவாகோட் பகுதிகளில் ஏராளமானோர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

கோவில்களில் மொபைல் போன் தடை: பக்தர்கள் சிரமத்தால் விதிகளை மறுபரிசீலிக்க கோரிக்கை
கோவில்களில் மொபைல் போன் தடை: பக்தர்கள் சிரமத்தால் விதிகளை மறுபரிசீலிக்க கோரிக்கை
5 மணி நேரங்கள் முன்பு
மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்: 12 நிபந்தனைகளுடன் அனுமதி
மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்: 12 நிபந்தனைகளுடன் அனுமதி
5 மணி நேரங்கள் முன்பு
வானத்தின் கண் இஓஎஸ்-05 வெற்றி: ஜிஎஸ்எல்வி எப்-17 மூலம் விண்ணில் நிலைநிறுத்திய இஸ்ரோ
வானத்தின் கண் இஓஎஸ்-05 வெற்றி: ஜிஎஸ்எல்வி எப்-17 மூலம் விண்ணில் நிலைநிறுத்திய இஸ்ரோ
1 நாட்கள் முன்பு
கோவில் சொத்து விவரங்கள் 90 நாட்களில் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட உத்தரவு
கோவில் சொத்து விவரங்கள் 90 நாட்களில் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட உத்தரவு
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்