விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
திருப்பூர்: விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பங்கேற்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ள உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று ஹிந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் ஆர்.டி.ஓ. தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பங்கேற்கக் கூடாது என்றும், முளைப்பாரி எடுத்துச் செல்லக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இத்தகைய கட்டுப்பாடுகள் ஹிந்துக்களின் மத வழிபாட்டு உரிமைக்கு எதிரானவை என்று ஹிந்து முன்னணி தெரிவித்துள்ளது.
மேலும், மேள தாளம் வாசிப்பவர்கள் பள்ளிவாசல் அருகே குறிப்பிட்ட தூரத்தில் நிறுத்தப்பட வேண்டும் என கூறப்பட்டிருப்பதும், ஊர்வலம் செல்லும் சாலைகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதும் ஏற்றுக்கொள்ள முடியாது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
எனவே, அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. பிறப்பித்துள்ளதாக கூறப்படும் உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று ஹிந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
அந்த உத்தரவு திரும்பப் பெறப்படாவிட்டால், ஹிந்து முன்னணி சார்பில் நடைபெற உள்ள விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தை ஒத்திவைக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
முதல்வர் தற்போது வெளிநாட்டில் இருந்தாலும், விநாயகர் சதுர்த்தி விழா சுமுகமாகவும் சிறப்பாகவும் நடைபெறுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
30 நிமிடங்கள் முன்பு
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
54 நிமிடங்கள் முன்பு
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
1 நாட்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்