சர்வதேச போதைப்பொருள் கும்பல் தலைவன் வீரேந்தர பசோயா கைது
ரூ.6,000 கோடி மதிப்பிலான மெபெட்ரோன் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாகக் கருதப்படும் சர்வதேச போதைப்பொருள் கும்பல் தலைவன் வீரேந்தர சிங் பசோயாவை, துபாயில் கைது செய்த அதிகாரிகள் அவரை டில்லிக்கு அழைத்து வந்துள்ளனர்.
2024ஆம் ஆண்டு புனேவில் கைது செய்யப்பட்ட ஒருவரிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணையை தொடங்கிய போலீசார், புனே மற்றும் டில்லியில் இருந்து மொத்தம் 1,837 கிலோ மெபெட்ரோன் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கின் பின்னணியில் செயல்பட்ட முக்கிய நபராக வீரேந்தர பசோயா அடையாளம் காணப்பட்டார். தொடர்ந்து, வழக்கின் விசாரணை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போலின் உதவியுடன், பசோயாவுக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, 'ஆப்பரேஷன் குளோபல் ஹன்ட்' என்ற சிறப்பு நடவடிக்கையின் மூலம், துபாயில் பதுங்கியிருந்த பசோயா கைது செய்யப்பட்டார்.
இந்திய மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கையின் மூலம் அவர் நாடு கடத்தப்பட்டு டில்லிக்கு அழைத்து வரப்பட்டார்.
இந்த நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உலகின் எந்த நாட்டில் பதுங்கியிருந்தாலும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது என்று தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
80வது சுதந்திர தினம்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
6 மணி நேரங்கள் முன்பு
இந்தியாவின் சகிப்புத்தன்மையை பலவீனமாக கருத வேண்டாம்: அஜித் தோவல் எச்சரிக்கை
6 மணி நேரங்கள் முன்பு
உலக அரங்கில் இந்தியாவுக்கு ஆதரவு அதிகரிக்கிறதா? ஆய்வில் வெளியான தகவல்
6 மணி நேரங்கள் முன்பு
தேங்கும் வழக்குகள்: நுகர்வோர் ஆணையத்தில் சீர்திருத்தம் தேவை என உச்ச நீதிமன்றம் கருத்து
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்