டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 தேர்வில் 821 காலியிடங்கள் மட்டும்; தேர்வர்கள் அதிருப்தி
தமிழக அரசு துறைகளில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளதாகக் கூறப்படும் நிலையில், டி.என்.பி.எஸ்.சி., சார்பில் 821 பணியிடங்களுக்கான அறிவிப்பு மட்டுமே வெளியிடப்பட்டிருப்பது தேர்வர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வு அறிவிப்பின்படி, குரூப்-2 பிரிவில் 41 பணியிடங்களும், குரூப்-2ஏ பிரிவில் 780 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.
தொழிலாளர் உதவி ஆய்வாளர், சார்-பதிவாளர், துணை வணிகவரி அதிகாரி மற்றும் தலைமைச் செயலக உதவிப்பிரிவு அலுவலர் உள்ளிட்ட முக்கியப் பதவிகளுக்கான காலியிடங்கள் மிகவும் குறைவாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்வர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தேர்தல் வாக்குறுதியில் அரசு காலிப்பணியிடங்களை விரைவாக நிரப்புவதாக அறிவித்திருந்த நிலையில், அதிக எண்ணிக்கையிலான பணியிடங்கள் அறிவிக்கப்படும் என தேர்வர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக மிகக் குறைவான பணியிடங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்வர்களிடையே ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
தேங்கும் வழக்குகள்: நுகர்வோர் ஆணையத்தில் சீர்திருத்தம் தேவை என உச்ச நீதிமன்றம் கருத்து
18 மணி நேரங்கள் முன்பு
விண்வெளி கழிவுகளை அகற்றி இந்தியா புதிய சாதனை
19 மணி நேரங்கள் முன்பு
கெருகம்பாக்கம் ஊராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை: ரூ.14.57 லட்சம் பறிமுதல்
19 மணி நேரங்கள் முன்பு
ஹார்முஸ் ஜலசந்தி மீதான சர்ச்சை தீவிரம்
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்