உடனடி செய்தி
செய்திகள் ⚡ உடனடி செய்தி

விண்வெளி கழிவுகளை அகற்றி இந்தியா புதிய சாதனை

விண்வெளி கழிவுகளை அகற்றி இந்தியா புதிய சாதனை
விண்வெளி கழிவுகளை கட்டுப்படுத்தும் சர்வதேச கொள்கைகளை பின்பற்றி, ராக்கெட்டின் மேல்பகுதியை ஒன்பது மாதங்களுக்குள் பூமிக்குத் திருப்பி, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் புதிய சாதனையை படைத்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்.வி.எம்.3 - எம்5 ராக்கெட் மூலம் சி.எம்.எஸ்-3 தகவல் தொடர்பு செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. செயற்கைக்கோள் தனது சுற்றுப்பாதையில் பிரிக்கப்பட்ட பிறகு, ராக்கெட்டின் மேல்பகுதி பாதுகாப்பான முறையில் விண்வெளியில் சுற்றிக் கொண்டிருந்தது. அதன் இயக்கத்தை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ரேடார் அமைப்புகள் தொடர்ந்து கண்காணித்தன. காலப்போக்கில் அந்த ராக்கெட் பாகம் பூமியை நோக்கி நகர்ந்தது. வளிமண்டலத்தில் நுழைந்தபோது ஏற்பட்ட அதிக வெப்பம் காரணமாக அதன் பெரும்பாலான பகுதிகள் எரிந்து அழிந்தன. மீதமிருந்த சில பகுதிகள் ஜூலை 30ஆம் தேதி அட்லான்டிக் பெருங்கடலில் விழுந்ததாக இஸ்ரோ உறுதிப்படுத்தியுள்ளது. பொதுவாக ராக்கெட்டின் பாகங்கள் பல ஆண்டுகள் விண்வெளி கழிவுகளாக சுற்றிக் கொண்டிருக்கும். ஆனால், இந்த முறை திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலம் ஒன்பது மாதங்களிலேயே அவற்றை அகற்றி, விண்வெளியை சுத்தமாக வைத்திருப்பதில் இந்தியா முன்னுதாரணமாக திகழ்கிறது.

தொடர்புடைய செய்திகள்

தேங்கும் வழக்குகள்: நுகர்வோர் ஆணையத்தில் சீர்திருத்தம் தேவை என உச்ச நீதிமன்றம் கருத்து
தேங்கும் வழக்குகள்: நுகர்வோர் ஆணையத்தில் சீர்திருத்தம் தேவை என உச்ச நீதிமன்றம் கருத்து
18 மணி நேரங்கள் முன்பு
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 தேர்வில் 821 காலியிடங்கள் மட்டும்; தேர்வர்கள் அதிருப்தி
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 தேர்வில் 821 காலியிடங்கள் மட்டும்; தேர்வர்கள் அதிருப்தி
19 மணி நேரங்கள் முன்பு
கெருகம்பாக்கம் ஊராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை: ரூ.14.57 லட்சம் பறிமுதல்
கெருகம்பாக்கம் ஊராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை: ரூ.14.57 லட்சம் பறிமுதல்
19 மணி நேரங்கள் முன்பு
ஹார்முஸ் ஜலசந்தி மீதான சர்ச்சை தீவிரம்
ஹார்முஸ் ஜலசந்தி மீதான சர்ச்சை தீவிரம்
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்