98வது ஆஸ்கர் விருதுகள்: ‘அவதார்: பயர் அண்ட் ஆஷ்’ படத்திற்கு சிறந்த Visual Effects விருது
திரையுலகில் மிகவும் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா ஆண்டுதோறும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறுகிறது. உலகம் முழுவதும் இருந்து சிறந்த திரைப்படங்களுக்கும் கலைஞர்களுக்கும் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
இந்த ஆண்டு நடைபெற்ற 98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டரில் இந்திய நேரப்படி மார்ச் 16 அதிகாலை 4.30 மணிக்கு கோலாகலமாக தொடங்கியது. இந்த விழாவில் பல்வேறு ஹாலிவுட் மற்றும் சர்வதேச திரைப்பட கலைஞர்கள் கலந்து கொண்டனர். இந்திய நடிகை பிரியங்கா சோப்ராவும் இந்த விழாவில் பங்கேற்றார்.
விருதுகளை பெற்ற படங்களில் முக்கியமாக ‘அவதார்: பயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் சிறந்த Visual Effects பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றது. அதேபோல் ‘வெப்பன்ஸ்’ திரைப்படத்தில் நடித்த ஏமி மேடிகன் சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை பெற்றார்.
மேலும் ‘தி கேர்ள் ஹூ கிரைட் பியர்ல்ஸ்’ திரைப்படம் சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. உலக திரைப்பட ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இந்த 98வது ஆஸ்கர் விழா மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.
தொடர்புடைய செய்திகள்
காஞ்சி ஸ்ரீ விஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்
15 மணி நேரங்கள் முன்பு
2029க்குள் போதைப்பொருள் இல்லாத இந்தியா: டிசம்பர் 31 வரை காலக்கெடு நிர்ணயித்த அமித் ஷா
15 மணி நேரங்கள் முன்பு
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
13 Sep 2026
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
13 Sep 2026
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்