'ஆப்பரேஷன் முக்தா': பெங்களூருவில் 105 வங்கதேசத்தினர் சிக்கினர்
பெங்களூரு: கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் போலீசார் நடத்திய தீவிர சோதனையில், உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக கூறப்படும் 105 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடகாவில் சட்டவிரோத குடியேற்றம் தொடர்பாக போலீசார் அவ்வப்போது சோதனைகளை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, பெங்களூருவின் ஒயிட்பீல்டு மற்றும் எலக்ட்ரானிக் சிட்டி பகுதிகளில் 'ஆப்பரேஷன் முக்தா' என்ற பெயரில் இரண்டு நாட்களாக சிறப்பு சோதனை நடத்தப்பட்டது.
ஒயிட்பீல்டு பகுதியில் சந்தேகத்திற்குரிய 1,035 பேரின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. இதில், சட்டவிரோதமாக குடியேறியதாக கூறப்படும் 62 வங்கதேசத்தினர் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
அதேபோல், எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் 1,909 பேரின் ஆவணங்கள் சோதனை செய்யப்பட்டதில், 43 வங்கதேசத்தினர் சிக்கினர்.
இரு பகுதிகளிலும் மொத்தம் 2,944 பேரின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, 105 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் வெளிநாட்டு பிராந்திய பதிவு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் ஆவணங்கள் மற்றும் பின்னணி தொடர்பான தகவல்கள் பெறப்பட்ட பின்னர், சட்டப்படி நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
காஞ்சி ஸ்ரீ விஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்
15 மணி நேரங்கள் முன்பு
2029க்குள் போதைப்பொருள் இல்லாத இந்தியா: டிசம்பர் 31 வரை காலக்கெடு நிர்ணயித்த அமித் ஷா
15 மணி நேரங்கள் முன்பு
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
13 Sep 2026
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
13 Sep 2026
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்