செய்திகள்
⚡ உடனடி செய்தி
அசாமில் பொது சிவில் சட்டம் அமல்; முக்கிய விதிகளை வெளியிட்ட அரசு
அசாம் மாநில சட்டசபையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதால், இனி அனைத்து மதத்தினருக்கும் திருமணம், விவாகரத்து, சொத்து மற்றும் குடும்ப உரிமைகள் தொடர்பாக ஒரே மாதிரியான விதிகள் அமலில் இருக்கும்.
புதிய சட்டத்தின் படி பலதார திருமணம் தடை செய்யப்பட்டுள்ளது. மனைவி உயிருடன் இருக்கும் நிலையில் வேறு உறவுகள் வைத்திருப்பதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. லிவ்-இன் உறவுகளை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என்றும், திருமண பதிவு 60 நாட்களுக்குள் செய்யப்பட வேண்டும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
மேலும், சொத்து உரிமையில் மனைவி மட்டுமல்லாமல் குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கும் சம உரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்பு மற்றும் சம உரிமையை உறுதி செய்யும் நோக்கில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டதாக அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கூறினார்.
இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அசாம் அரசுக்கும் சட்டத்தை ஆதரித்த எம்.எல்.ஏ.க்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ஒரே சட்ட அமைப்பை கொண்டு வர பாஜ உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா; இன்று ராஜினாமா
14 மணி நேரங்கள் முன்பு
தமிழக நலத்திட்டங்களுக்கு நிதி கோரி பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் விஜய்
14 மணி நேரங்கள் முன்பு
முக்கிய குற்ற வழக்குகளில் உயர் அதிகாரிகள் நேரடியாக தலையிட வேண்டும்: முன்னாள் ஐ.ஜி. வலியுறுத்தல்
14 மணி நேரங்கள் முன்பு
தமிழக உயர்கல்வி நெருக்கடி | 12 பல்கலைகளில் துணைவேந்தர் இல்லை
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்