அண்ணாமலைக்கு போட்டி அழுத்தம்: உத்தரவாதம் கோரி நிலைப்பாடு
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் பா.ஜ. வேட்பாளர்களுக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த தமிழக பா.ஜ. முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு திடீரென மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.
அப்போது, கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் உடனடியாக கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்து, ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்து சென்னைக்கு வருமாறு கோயல் கேட்டுக் கொண்டார். இதையடுத்து அண்ணாமலை சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற மையக் குழு கூட்டத்தில் பங்கேற்றார்.
அந்த கூட்டத்தில், வரும் சட்டசபைத் தேர்தலில் அண்ணாமலை கட்டாயம் போட்டியிட வேண்டும் என்பது கட்சித் தலைமையின் விருப்பம் என தெரிவிக்கப்பட்டது. மற்ற தலைவர்கள் அனைவரும் போட்டியிடும் நிலையில், அண்ணாமலை மட்டும் விலகினால் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டதாக தோன்றும் என்பதும் வலியுறுத்தப்பட்டது.
மேலும், அ.தி.மு.க.விடமிருந்து பா.ஜ. பெற்ற தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் போட்டியிட வேண்டும் என பீயூஷ் கோயல் தொடர்ந்து வலியுறுத்தினார். ஆனால், அண்ணாமலை ஆரம்பத்தில் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், தேர்தலில் போட்டியிட கட்சித் தலைமையிடமிருந்து உறுதியான உத்தரவாதம் தேவைப்படுகின்றது என அண்ணாமலை தெரிவித்துள்ளார் என்று கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: கருணை அடிப்படையிலான அரசு பணி நியமனத்தை ரத்து செய்த உயர்நீதிமன்றம்
9 மணி நேரங்கள் முன்பு
'நீட்' போராட்டம் சர்ச்சை: இ.கம்யூ. மீது த.வெ.க. அதிருப்தி? கூட்டணியில் விரிசல் பேச்சு
9 மணி நேரங்கள் முன்பு
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் தீவிரம்; முசாபராபாத்தை நோக்கி ஆயிரக்கணக்கானோர் பேரணி
9 மணி நேரங்கள் முன்பு
காமன்வெல்த் பளுதூக்குதலில் தங்கம் வென்ற மீராபாய் சானு; வரலாற்றுச் சாதனை படைத்து இந்தியாவுக்கு பெருமை
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்