அண்ணாமலையின் புதிய திட்டம்: 'மிஸ்டு கால்' மூலம் உறுப்பினர் சேர்க்கை
சென்னை: 'வீ தி லீடர்ஸ்' அமைப்பில் உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், 'மிஸ்டு கால்' இயக்கத்தை தொடங்க அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, அக்கட்சியில் இருந்து விலகிய பின்னர் 'வீ தி லீடர்ஸ்' என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார். இந்த அமைப்பு சார்பில் கடந்த ஜூலை மாதம் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தற்போது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
அமைப்பில் இதுவரை 19.47 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளதாக நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தது 50 லட்சம் உறுப்பினர்களை இணைத்த பிறகே அரசியல் கட்சி தொடங்குவது என்ற இலக்கில் அண்ணாமலை செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இணையதளத்தை பயன்படுத்துவதில் சிரமம் உள்ள கிராமப்புற மக்களையும் அமைப்பில் இணைக்கும் நோக்கில் 'மிஸ்டு கால்' திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மிஸ்டு கால் வழங்கும் அனைவரையும் உடனடியாக உறுப்பினர்களாக சேர்க்காமல், அவர்களை தொடர்பு கொண்டு தேவையான தகவல்களை சேகரித்த பின்னர் உறுப்பினர் சேர்க்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக அமைப்பின் மூத்த உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
'ஆப்பரேஷன் முக்தா': பெங்களூருவில் 105 வங்கதேசத்தினர் சிக்கினர்
2 மணி நேரங்கள் முன்பு
பழனி நில மோசடி விவகாரத்தில் புதிய அதிர்ச்சி: ஆயக்குடி கோவில் நிலமும் முறைகேடாக பதிவு
2 மணி நேரங்கள் முன்பு
இந்தியா–சீனா எல்லை பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு: இரு நாடுகளும் முடிவு
2 நாட்கள் முன்பு
டெண்டர் ரத்து செய்வதிலும் முறைகேடா? அமைச்சர்கள் மீது அதிர்ச்சி புகார்
2 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்