செய்திகள்
⚡ உடனடி செய்தி
அதிமுக எம்.எல்.ஏ., ராஜினாமா சர்ச்சை | சபாநாயகர் முடிவுக்கு எதிர்ப்பு
சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் பிரபாகரை சந்தித்த பழனிசாமி தரப்பு அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள், ராஜினாமா செய்த உறுப்பினர்களின் கடிதங்களை ஏற்கக் கூடாது என மனு அளித்தனர்.
இதுகுறித்து பேசிய ‘அக்ரி’ கிருஷ்ணமூர்த்தி, “ராஜினாமா கடிதம் கொடுத்த சில நிமிடங்களிலேயே த.வெ.க., உறுப்பினர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இது தலைமை செயலகமா அல்லது கட்சி அலுவலகமா என்ற கேள்வி எழுகிறது” என்றார்.
மேலும், “தூய்மையான ஆட்சி தருவோம் என்று கூறிய அரசு தற்போது குதிரை பேரத்தை ஊக்குவிக்கிறது” என்றும் குற்றம்சாட்டினார். தங்கள் தவறை உணர்ந்த ஐந்து எம்.எல்.ஏ.,க்கள் மன்னிப்பு கடிதம் அளித்துள்ளதாகவும், அவர்களின் ஆதரவு வாபஸ் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதேபோல், அ.தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு செயலரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான இன்பதுரை, “கட்சி தாவல் தடை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலையில், ராஜினாமாவை ஏற்றது தவறானது” என்று விமர்சித்தார்.
சபாநாயகர் முடிவை திரும்ப பெறவில்லை என்றால் நீதிமன்றத்தை அணுகுவோம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
தொடர்புடைய செய்திகள்
போதைப்பொருள் ஒழிப்பில் தென் மாநிலங்கள் இணைப்பு; 'ஆப்பரேஷன் துபான்' திட்டம் விரிவாக்கம்
7 மணி நேரங்கள் முன்பு
'போதையில்லா தமிழகம்' மாநாடு இன்று பொள்ளாச்சியில்; 'வீ த லீடர்ஸ்' சார்பில் அண்ணாமலை பங்கேற்பு
7 மணி நேரங்கள் முன்பு
பின்னணிப் பாடல் உலகின் ஜாம்பவான் எஸ். ஜானகி காலமானார்; இசை ரசிகர்கள் சோகத்தில்
7 மணி நேரங்கள் முன்பு
பதவி, 'சீட்' ஏமாற்றம்: காங்கிரஸிலிருந்து தவெக-வுக்கு நகரும் சிதம்பரம் ஆதரவாளர்கள்?
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்