உடனடி செய்தி

அ.தி.மு.க.வில் குழப்பம்: முடிவு சபாநாயகர் கையில் – இன்று நம்பிக்கை ஓட்டெடுப்பு

அ.தி.மு.க.வில் குழப்பம்: முடிவு சபாநாயகர் கையில் – இன்று நம்பிக்கை ஓட்டெடுப்பு
சென்னை: தமிழக சட்டசபையில் அ.தி.மு.க. கட்சிக்குள் அரசியல் குழப்பம் அதிகரித்து வருகிறது. சட்டசபை தேர்தலில் அக்கட்சி 47 இடங்களில் வெற்றி பெற்றது. கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமியை சட்டசபை குழுத் தலைவராக தேர்வு செய்து, எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்ட கடிதம் சபாநாயகரிடம் அளிக்கப்பட்டது. ஆனால், தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிப்பது குறித்து கட்சிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து, 30 எம்.எல்.ஏ.க்கள் தனியாக கூட்டம் நடத்தி, வேலுமணியை சட்டசபை குழுத் தலைவராகவும், விஜயபாஸ்கரை கொறடாவாகவும் தேர்வு செய்து, சபாநாயகரிடம் மற்றொரு கடிதம் வழங்கினர். சட்டசபை விதிகளின்படி, ஒரு கட்சியில் இருந்து குறைந்தது 16 எம்.எல்.ஏ.க்கள் பிரிந்தால், அவர்கள் தனி அணியாக செயல்பட அனுமதி உள்ளது. தற்போதைய நிலையில், பழனிசாமி தரப்பும், வேலுமணி தரப்பும் என இரண்டு அணிகள் உருவாகியுள்ளன. இதனால், சபாநாயகர் அ.தி.மு.க.-1 மற்றும் அ.தி.மு.க.-2 என இரண்டு அணிகளாக அங்கீகரிக்க வாய்ப்பு உள்ளது. அப்படி அங்கீகரிக்கப்பட்டால், ஒவ்வொரு அணியிலும் உள்ள எம்.எல்.ஏ.க்கள், அந்த அணியின் கொறடா உத்தரவை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இந்த சூழ்நிலையில், வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாக வாக்களித்தாலும், அவர்கள் பதவிக்கு ஆபத்து ஏற்படாது என்று கூறப்படுகிறது. இதற்கிடையில், தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள விஜய், இன்று சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர் உத்தரவிட்டுள்ளார். காலை 9:30 மணிக்கு நம்பிக்கை ஓட்டெடுப்பு நடைபெற உள்ளது. விஜய் தலைமையிலான கட்சிக்கு 107 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் தலா இரண்டு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளிக்கின்றனர். மேலும் காங்கிரஸ் கட்சியின் ஐந்து எம்.எல்.ஏ.க்களும் ஆதரவு தருகின்றனர். அத்துடன், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்துள்ளதால், விஜய் பெரும்பான்மை நிரூபிப்பதில் சிக்கல் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

காஞ்சி ஸ்ரீ விஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்
காஞ்சி ஸ்ரீ விஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்
24 Sep 2026
2029க்குள் போதைப்பொருள் இல்லாத இந்தியா: டிசம்பர் 31 வரை காலக்கெடு நிர்ணயித்த அமித் ஷா
2029க்குள் போதைப்பொருள் இல்லாத இந்தியா: டிசம்பர் 31 வரை காலக்கெடு நிர்ணயித்த அமித் ஷா
24 Sep 2026
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
13 Sep 2026
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
13 Sep 2026

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்