உடனடி செய்தி

ஏப்ரல் 30க்குள் அயோத்தி ராமர் கோவில் கட்டுமானம் நிறைவு – நிருபேந்திரா மிஸ்ரா அறிவிப்பு

ஏப்ரல் 30க்குள் அயோத்தி ராமர் கோவில் கட்டுமானம் நிறைவு – நிருபேந்திரா மிஸ்ரா அறிவிப்பு

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ஸ்ரீ ராமர் கோவிலின் அனைத்து கட்டுமானப் பணிகளும் வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள் முழுமையாக நிறைவடையும் என்று கட்டுமானக் குழுத் தலைவர் நிருபேந்திரா மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் நடைபெற்ற இரு நாள் கட்டுமானக் குழு கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். கோவில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வரும் எல்அன்டி மற்றும் டாடா கன்சல்டன்சி நிறுவனங்கள், ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் தங்களின் பணிகளை முழுமையாக முடித்து கோவில் வளாகத்தை விட்டு வெளியேற உள்ளதாக அவர் கூறினார்.

அதே நாளுக்குள் அனைத்து ஆவணப் பணிகள் மற்றும் பில் கட்டண நடைமுறைகள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். கட்டுமானப் பணிகளுக்கு மூன்று ஆண்டுகள் உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளதாகவும், பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளுக்காக இரு நிறுவனங்களின் சிறிய குழு மட்டும் தொடர்ந்தும் பணியில் இருக்கும் என்றும் கூறினார்.

ஏப்ரல் 30க்கு பின்னர், அனைத்து ஒப்பந்தங்களும் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் கட்டுப்பாட்டுக்குள் வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராமர் கோவில் கட்டுமானத்திற்கு மொத்தமாக ரூ.1,900 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், ஜிஎஸ்டி உட்பட ரூ.1,600 கோடி தொகை ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ளதாக நிருபேந்திரா மிஸ்ரா தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

கோரிக்கைகளை ஏற்ற கட்சிகளுக்கே ஹிந்துக்கள் ஓட்டு: ஹிந்து உரிமை மீட்பு மாநில மாநாட்டில் தீர்மானம்
கோரிக்கைகளை ஏற்ற கட்சிகளுக்கே ஹிந்துக்கள் ஓட்டு: ஹிந்து உரிமை மீட்பு மாநில மாநாட்டில் தீர்மானம்
19 மணி நேரங்கள் முன்பு
கோவை வாக்காளர்களுக்கு பரிசு மழை? வெள்ளி நாணயம், டிவி வரை கிப்ட் என அரசியல் போட்டி
கோவை வாக்காளர்களுக்கு பரிசு மழை? வெள்ளி நாணயம், டிவி வரை கிப்ட் என அரசியல் போட்டி
19 மணி நேரங்கள் முன்பு
சபரிமலை ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் சந்தேக பரிவர்த்தனை: நீதிமன்றத்திற்கு அறிக்கை
சபரிமலை ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் சந்தேக பரிவர்த்தனை: நீதிமன்றத்திற்கு அறிக்கை
19 மணி நேரங்கள் முன்பு
ஈரான் தற்கொலைப் படகு தாக்குதல்: அமெரிக்க எண்ணெய் டேங்கர் கப்பலில் இந்தியர் பலி
ஈரான் தற்கொலைப் படகு தாக்குதல்: அமெரிக்க எண்ணெய் டேங்கர் கப்பலில் இந்தியர் பலி
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்